இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ; பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி ; ஓ..ஓ… பழைய நியபகம் நினைவிற்கு வந்துவிட்டதோ…!!!

விராட்கோலியின் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன்ஷிப் பதவி பற்றி பேசியுள்ளார் கங்குலி….!!

நேற்று விராட்கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே அறிவித்தார். அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் பல குழப்பத்தில் உள்ளனர். அதற்க்கு காரணம் சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐ செய்த செயல் தான்…!

ஆமாம் உலகக்கோப்பை டி20 போட்டிக்கு பிறகு நான் டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக அவரே (விராட்கோலி) அறிவித்தார். பின்னர் பிசிசிஐ மற்றும் இந்திய அணியின் தேர்வு குழு எடுத்த அதிரடி முடிவால் விராட்கோலியிடம் முன்கூட்டியே சொல்லலாம் திடிரென்று நான் உன்னை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து உன்னை வெளியேற்ற போகிறோம் என்று கூறியுள்ளனர் (பிசிசிஐ மற்றும் தேர்வு குழு ) .

ஆனால் அதன்பின்னர் பேட்டி அளித்த கங்குலி நான் விராட்கோலியிடன் சொன்னேன், டி20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டாம் என்று. ஆனால் விராட்கோலி தான் கேட்கவில்லை என்று கூறினார் கங்குலி. இறுதியாக விராட்கோலி அளித்த பேட்டியில், என்னிடம் யாரும் அப்படி சொல்லவில்லை என்று கூறிய உடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பிசிசிஐ மேல் கடுமையான விமர்சனம் செய்தனர்.

இதையடுத்து , விராட்கோலி இப்பொழுது டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு கங்குலி இதனை பற்றி பேசியுள்ளார். அதில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அதிக அளவில் வளர்ச்சியை பெற்றுள்ளது. இது அவருடைய தனிப்பட்ட முடிவு தான், அதனை பிசிசிஐ மதிக்கிறது. அதுமட்டுமின்றி இந்திய அணியில் இவர் மிகவும் முக்கியமான வீரர், அவருடைய பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணிக்கு தேவை படுகிறது என்று கூறியுள்ளார் கங்குலி.

இந்திய அணியின் கேப்டனான விராட்கோலி தான் வெற்றிகரமான கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய சரியா இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!