இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்க.. அதிலும் ரன்களை அடிக்கவில்லை என்றால் அப்புறம் பேசுங்க ; சேவாக் அதிரடி பேட்டி…!!

சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் சீரியஸ் போட்டிகளில் நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் ஐந்தாவது போட்டி தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் சிலருக்கு ***** தொற்று ஏற்பட்டது.

அதனால் தான் ஐந்தாவது போட்டி நின்று போனது. அதிலும் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. அனைத்து போட்டிகளிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மற்றும் இறுதியாக பேட்டிங் செய்த வீரர்கள் தான் ரன்களை அடித்து குவித்துள்ளனர்.

ஆனால் இந்திய அணியில் இருக்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வெளியில் சொல்லும் அளவுக்கு அடிக்கவில்லை. அதிலும் குறிப்பாக ரஹானே, புஜரா போன்ற வீரர்கள் எதுமே அடிக்கவில்லை என்பது தான் உண்மை. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 4 டெஸ்ட் -ல் விளையாடி 109 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

ஆனால் பவுலர் ஆன ஷர்டுல் தாகூர் விளையாடி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 117 ரன்களை விளாசியுள்ளார். அதேபோல அதிக ரன்களை எடுத்து கொடுத்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் 315 ரன்களையும், ரோஹித் ஷர்மா 368 ரன்களை விளாசியுள்ளனர்.

இந்த போட்டியை பற்றி பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரரான சேவாக் ; போட்டிகள் நன்றாக தான் நடைபெற்றது. என்னை பொறுத்தவரை ரஹானே சிறப்பாக தான் விளையாடினார். அதனால் அவருக்கு இந்தியாவில் நடைபெறம் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்.

அப்பையும் அவர் பேட்டிங் செய்யவில்லை என்றால் நீங்கள் அவரை பற்றி பேசலாம். இல்லையென்றால் அமைதியாக இருங்க என்று கூறியுள்ளார் சேவாக். அவர் விளையாடுன விதம் அருமையாக தான் இருந்தது. ஏனென்றால் ரஹானேவை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக இருப்பது இந்திய அணிக்கு ஆபத்து என்று பல முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

வருகின்ற செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் டி20 போட்டிகளும் அக்டோபர் 17ஆம் தேதி ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.