வீடியோ ; 2018ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இருந்து வெளியேற்றம் ; 2022ஆம் ஆண்டு அருமையான கம்பேக் கொடுத்த ஹர்டிக் பாண்டிய ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

ஆசிய கோப்பை :

ஆசிய கோப்பை 2022 போட்டிகள் இரு தினங்களுக்கு முன்பு ஆரம்பித்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய கோப்பை அடுத்த மதம் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்திய, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டியின் சுருக்கம்:

உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மற்ற போட்டிகளை விட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் மிகவும் பிடிக்கும். அதில் தான் பல சுவாரஷியம் இருக்கும். நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் மோதிக்கொண்டனர். அதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இறுதிவரை போராடிய 10 விக்கெட்டையும் இழந்த நிலையில் 147 ரன்களை அடித்தனர். பின்பு 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்து வந்த இந்திய அணி, ஆனால் விராட்கோலி, ஹர்டிக், ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் 148 ரன்களை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய.

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதே துபாய் சர்வதேச மைதானத்தில் தான் மோதியது. அதில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான் அணி. அதற்கு பதிலடியாக நேற்று நடந்த போட்டி இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஹர்டிக் பாண்டியாவின் கம்பேக் :

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர் தான் ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் இருந்து அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியாமல் போனது. ஒரு பேட்ஸ்மேனாக அதுவும் பெரிய அளவில் விளையாடாமல் தவித்து கொண்டு இருந்தார்.

பின்னர் சில மாதங்களுக்கு பிறகு ஐபிஎல் 2022 போட்டிகளில் இருந்து அதிரடியாக விளையாட தொடங்கியுள்ளார் ஹர்டிக். கடந்த 2019ஆம் ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்த ஹர்டிக் பாண்டியாவுக்கு தீடிரென்று காயம் ஏற்பட்டது. அதன்பின்னர் அவரால் ஆசிய கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.

ஆனால் நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்து மூன்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி பேட்ஸ்மேனாக களமிறங்கி அதிரடியாக விளையாடி உள்ளார். அதுவும் இறுதியில் 3 பந்தில் 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்பொழுது ஹர்டிக் பாண்டிய தைரியமாக சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.