விராட் கோலி செய்தது கொஞ்சம் கூட நியாயமே இல்லை ; விரேந்தர் சேவாக் அதிரடி கருத்து …!

IND vs ENG 2021: நேற்று நடந்த இராவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் விதியசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து அணி. இதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் நாளை நடைபெற போகின்ற இறுதி ஒருநாள் போட்டியே தொடரின் வெற்றியை தீர்மானிக்கும்.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய வீரர்கள் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்களை எடுத்தனர். முதல் ஒருநாள் போட்டி போல் பவுலிங்கில் இங்கிலாந்து அணியை பவுலிங்கில் மடக்கிவிடலாம் என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய அணிக்கு ஏமாற்றமே.

ஏனென்றால் இங்கிலாந்து அணியின் வீரர் பரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரின் ஆட்டம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லலாம். பரிஸ்டோவ் 124 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 99 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

Also Read : சதம் அடிக்க முடியாமல் விக்கெட் இழந்த பென் ஸ்டோக்ஸ், அவரது அப்பாவிடம் மனிப்பு கேட்டார்…! ஏன் தெரியுமா..! நெகிழ்ச்சி சம்பவம்… !!!

43.3 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை எடுத்து இந்திய அணியை 6 விக்கெட் விதியசத்தில் வென்றது. இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங் தான் காரணமா?? விராட் கோலி செய்தது கொஞ்சம் கூட நியாயமே இல்லை ; விரேந்தர் சேவாக் அதிரடி கருத்து …!

போட்டி முடிந்த பிறகு விராட் கோலி அளித்த பேட்டியில் ; ஹார்டிக் பாண்டியாவுக்கு ஏன் பவுலிங் தரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளித்த விராட் கோலி , ஹர்டிக் பாண்டியாவுக்கு அதிகமான வேலை திறன் உள்ளதால் அதனை தவிர்க்க பவுலிங் அவருக்கு கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார் விராட் கோலி.

இதனை கண்டித்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விரேந்தர் சேவாக், யார் முடிவு செய்தது ஹார்டிக் பந்தியாவுக்கு அதிக வேலை சுமை என்று ? இந்தியாவுக்கு சில மாதங்களுக்கு எந்த விதமான போட்டியும் இல்லை. ஐபிஎல் போட்டி ஒன்றுதான் உள்ளது.அவரால் முடியாமல் போன கூட பரவவில்லை. அனால் அவருக்கு ஏன் ஒரு ஓவர் கூட கொடுக்கவில்லை??

அப்படி பார்த்தால் ஹார்டிக் பாண்டிய 50 ஓவர் முழுவதும் பீல்டிங் செய்துள்ளார். அது அவருக்கு சோர்வாக இருக்காதா ? என்ன பேசுறீங்க?? என்று கூறியுள்ளார் விரேந்தர் சேவாக்..!