வீடியோ : பாகிஸ்தான் அணியை வென்ற பிறகு ஹர்டிக் பாண்டிய கண்கலங்கிய படி பேட்டி கொடுத்துள்ளார் ; அப்படி என்ன சொன்னார் ..! தெரியுமா ?

0

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பவுலிங்கை தேர்வு செய்தனர்.

போட்டியின் விவரம் :

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடக்க வீரரான பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் போன்ற இரு பேட்ஸ்மேன்களும் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இருந்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 159 ரன்களை அடித்தனர். பின்பு 160 ரன்களை சுலபமாக அடித்துவிடாமல் என்று நினைத்து கொண்டு இருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஆமாம், ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் மற்றும் நம்பிக்கை நாயகன் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் விக்கெட் தான் இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால் சமீப காலமாக மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது.

ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட்கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் ஹர்டிக் பாண்டிய மற்றும் விராட்கோலியின் பார்ட்னெர்ஷிப் தான் என்பதில் சந்தேகமில்லை.

இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது இந்திய. அதனால் புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.

மாஸ் கம்பேக் கொடுத்த ஆல் – ரவுண்டர் :

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை 2021 போட்டியில் இடம்பெற்ற ஹர்டிக் பாண்டிய பெரிய அளவில் விளையாடவில்லை. அதனால் பல விமர்சனங்கள் எழுந்தன. பின்பு நான் பவுலிங் சரியாக பவுலிங் செய்யும் வரை என்னை எந்த விதமான போட்டிகளில் எடுக்க வேண்டுமென்று ஹார்டி பாண்டியவே கூறிநார்.

அவர் சொன்னது போலவே ஐபிஎல் 2022 போட்டியில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல இந்திய அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக் பாண்டிய. இன்றைய போட்டியில் ஹர்டிக் பண்டிய சரியாக ரன்களை அடிக்கவில்லை என்றால் இந்திய அணிக்கு தோல்வி தான் கிடைத்திருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

போட்டி முடிந்த பேசிய ஹர்டிக் பாண்டிய அவர் விளையாடியதை பற்றி பேசிக்கொண்டு இருந்தார். அப்பொழுது அவரது அப்பாவை பற்றி பேசிய போது “எனக்கு என்னுடைய குழந்தை அதிகமாக பிடிக்கும். ஆனால் குழந்தைக்காக அங்கு இருந்து வெளியேற முடியாது. ஆனால் நானும் என்னுடைய சகோதரனும் 6வயதில் இருக்கும்போது கிரிக்கெட் போட்டியில் நாங்க விளையாட வேண்டுமென்றதால் ஒரு நகரத்தை விட்டு இன்னொரு நகரத்திற்கு வந்தார் (அப்பா), அது தான் பெரிய விஷயம் என்று ஹர்டிக் பாண்டிய அழுதுகொண்டே பேசியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த வெற்றியை நான் என்னுடைய அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார் ஹர்டிக்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here