ஆசிய கோப்பை 2022: கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஆசிய கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த முறை இலங்கையில் நடக்க வேண்டிய போட்டி அங்கு இருக்கும் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியுள்ளனர்.


இந்த ஆண்டு ஆசிய கோப்பை டி-20 2022 லீக் போட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகள் இடம்பெற்றுள்ளனர். நேற்று நடந்த இரண்டாவது ஆசிய கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கினார்கள். ஆனால் எதிர்பாராத வகையில் பாபர் அசாம் விக்கெட்டை இழந்த காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவானது. இருப்பினும் ரிஸ்வான் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்.
அதனால் 19.5 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணி 147 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 148 ரன்களை சுலபமாக இந்திய அணி அடித்துவிடும் என்று நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். அதனால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.


அதுமட்டுமின்றி கேப்டன் ரோஹித் ஷர்மாவும் பெரிய அளவில் விளையாடாமல் விக்கெட்டை இழந்தார். ஆனால் விராட்கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றியை கைப்பற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக ஜடேஜா மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
ஆமாம் , முதல் மூன்று விக்கெட்டை இழந்த இந்திய அணி ஓவருக்கு 10 ரன்களை அடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது. அப்பொழுது ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி பவுண்டரிகளை அடித்தார். அதனால் தான் இந்திய அணி போட்டியில் வெல்ல முடிந்தது.
போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் ஆல் – ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் “நாங்க இறுதிவரை விளையாட வேண்டுமென்று தான் நினைத்தோம். உண்மையிலும் பாகிஸ்தான் வீரர்களின் பவுலிங் அட்டகாசமாக இருந்தது தான் உண்மை. நான் தான் இறுதியாக போட்டியை முடித்திருக்க வேண்டும்.”


“இடது சுழல் பந்து வீச்சாளர் (முகமத் நவாஸ்) இடது கை பேட்ஸ்மேன் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் ஹர்டிக் பாண்டிய சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை வெற்றிபெற வைத்துள்ளார். அவர் பேட்டிங் செய்ய வந்த நேரத்தில் அவர் 9ஹர்டிக் பாண்டிய) நான் என்னுடைய ஷாட்ஸ் விளையாட போகிறேன் என்று கூறினார். அப்பொழுது எனக்கு ஆச்சரியமாக இருந்தது மட்டுமின்றி அவரது விளையாட்டை பார்க்க நானும் ஆவலாக தான் இருந்தேன் என்று கூறியுள்ளார் ஜடேஜா.”