வீடியோ; ரொம்ப நன்றி நல்ல வேல காப்பாத்திட … ஹார்டிக் பாண்டிய செய்த குறும்பு …வைரலாகும் வீடியோ….!

IND VS ENG 2021: நேற்று நடந்து முடிந்த இறுதி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா மற்றும் தவான் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். அதில் ரோஹித் சர்மா 37 ரன்கள் மற்றும் தவான் 67 ஆட்டம் இழந்தனர்.

அதன்பின்னர் பேட்டிங் செய்த ரிஷாப் பண்ட் மற்றும் ஹார்டிக் பாண்டிய ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 329 ரன்கள் எடுத்தனர். 330 ரன்கள் எடுத்தால் வெற்றி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் இந்த முறை அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த பரிஸ்டோவ் வெறும் ஒரு ரன்களில் ஆட்டம் இழந்தார். இப்பொழுது இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்த நிலையில் 282 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து அணி.

சாம் கரன் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே சொல்லலாம். இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

வீடியோ; ரொம்ப நன்றி நல்ல வேல காப்பாத்திட … ஹார்டிக் பாண்டிய செய்த குறும்பு …வைரலாகும் வீடியோ….!

4வது ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தை எதிர்கொண்ட இங்கிலாந்து அணியின் ஆல் – ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிக்சர் அடிக்கமுயன்றார். அதனை பிடிக்க முயன்ற ஹார்டிக் பாண்டிய தவறவிட்டார்.

வீடியோ:

10வது ஓவர் வீசிய இந்திய அணியின் நடராஜன் பந்தை அடித்த பென் ஸ்டோக்ஸ் எதிர்பாராத விதமாக தவான் அதனை பிடித்து பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினர்.

பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டை எடுத்ததால், மைதானத்தில் இருந்த ஹார்டிக் பாண்டிய தலையை கீழே சாய்த்தும் , தரையில் மண்டியிட்டும் நகைச்சுவையாக நன்றியை கூறினார் ஹார்டிக் பாண்டிய. அவர் செய்த இந்த குறும்பு தனம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோ: