மும்பை ஏர்போர்ட்டில் வசமாக சிக்கிய ஹர்திக் பாண்டியா!! 5 கோடி ரூபாய் கடத்தலா?? – முழு விபரம்

மும்பை ஏர்போர்ட்டில் ஹார்திக் பண்டியாவிடம் இருந்து சுமார் 5 கோடி மதிப்பிலான பொருட்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுடன் இந்திய அணி வெளியேறியது.  அதன்பிறகு ஓரிரு நாட்கள் துபாயில் உள்ள பகுதிகளை சுற்றிப்பார்த்த பின்னர், வீரர்கள் நாடு திரும்பி வருகின்றனர். கடந்த நவம்பர் 14ஆம் தேதி துபாய் விமான நிலையத்தில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு ஹர்திக் பாண்டியா வந்தடைந்தார்.

மும்பை விமானநிலையத்தில் ஹர்திக் பாண்டியாவிடம் சுங்கத் துறையினர் வழக்கமான சோதனையை மேற்கொண்டனர். துபாயிலிருந்து இரண்டு உயர்ரக வாட்சுகளை எடுத்து வந்திருக்கிறார். அதற்கான முறையான ஆவணம் ஹர்திக் பாண்டியாவிடம் இடமில்லை. ஆகையால் சுங்கத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த செய்தி வெளிவந்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட பிறகும் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. 

இதற்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் க்ருனால் பாண்டியா மும்பை சுங்கத் துறையினரால் பரிசோதனை செய்யப்பட்டபோது, இதேபோன்று முறையான ஆவணங்கள் இல்லாத உயர்ரக பொருட்கள் மற்றும் தங்கங்கள் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணியுடனான தொடர்:

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு வருகிற நவம்பர் 17ஆம் தேதி நியூசிலாந்து அணியுடனான டி20 தொடர் துவங்கவிருக்கிறது. அதில் பங்கேற்க நியூசிலாந்து வீரர்கள் ஏற்கனவே ஜெய்ப்பூர் வந்தடைந்தனர். இந்திய வீரர்களும் தங்களது பயிற்சியை துவங்கியுள்ளனர்.

 

இந்த தொடரில் முன்னணி வீரர்களான விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி ஆகியோர் இடம்பெறவில்லை அவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறது. டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பு வகிக்கிறார். அதேபோல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ராகுல் டிராவிட், நியூசிலாந்து தொடருக்கு வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வருவதை பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்கியதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு தற்காலிகமாகவே ரோகித் சர்மா வசம் இருக்கிறது. நியூஸிலாந்து தொடருக்குப் பின்னரே, அடுத்த உலகக் கோப்பை வரை யார் டி20 போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பார் என்பது தெரிவிக்கப்படும் என்கிற செய்திகளும் வெளிவருகின்றன.