ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் துணை கேப்டன் இவர் தான் ; பா..! கம்பேக் இதுதான் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டி இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற போவதாக ஐசிசி கூறியுள்ளது. அதிலும் இந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான ஆலோசனை மற்றும் பயிற்சியில் உள்ளனர்.

இந்திய அணி மற்றும் வெஸ்ட்இண்டீஸ் அணியின் விவரம்:

கடந்த மாதம் ஜூலை 22ஆம் தேதி முதல் தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்து தொடரை கைப்பற்றியது இந்திய. அதனை தொடர்ந்து இப்பொழுது டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணியின் கேப்டன் சர்ச்சை:

கடந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ஆம்பித்தது கேப்டன் பற்றிய சர்ச்சை. ஆனால் ஒருவழியாக அணைத்து விதமான போட்டிக்கும் ரோஹித் சர்மா இப்பொழுது இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் ஒவ்வொரு போட்டியிலும் துணை கேப்டன் மாற்றிக்கொண்டு வருகின்றனர்.

ஆமாம், விராட்கோலி கேப்டனாக இருந்த நேரத்தில் அதிகப்படியான போட்டிகளில் ரோஹித் சர்மா தான் துணை கேப்டனாக வழிநடத்தி வந்துள்ளார். ஆனால் இப்பொழுது யார் துணை கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி இந்த ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் துணை கேப்டனாக ஹர்டிக் பாண்டிய விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் மோசமான விளையாடி கொண்டு இருந்த ஹர்டிக் பாண்டிய இப்பொழுது சிறப்பாக விளையாடி வருகிறார். பேட்டிங் மற்றுமின்றி சிறப்பாக பவுலிங் செய்தும் வருகிறார் ஹர்டிக் பாண்டிய. அதனால் இவரது பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.

ஹர்டிக் பாண்டிய துணை கேப்டனாக இடம்பெற்றால் நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் சிறப்பான விஷயம் தான். ஏனென்றால் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 போட்டியில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார் ஹர்டிக் பாண்டிய. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022 போட்டிக்கான சாம்பியன் படத்தையும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் நீண்ட ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு இடையே நல்ல புரிதல் இருக்கும். அதனால் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்த அது உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here