போட்டி 65 :
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் 18 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர். அதில் மும்பை மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா 9 போட்டிகளில் வென்றுள்ளனர்.


போட்டியின் விவரம்:
நேற்று நடந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது சன்ரைசர்ஸ் ஹைதெராபாத். எதிர்பார்த்த படி பார்ட்னெர்ஷிப் ஆட்டம் அமைந்தது.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 193 ரன்களை அடித்தனர். அதி அபிஷேக் சர்மா 9, பிரியம் கார்க் 42, ராகுல் த்ரிப்தி 76, பூரான் 38 ரன்களை அடித்தனர். பின்பு 194 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.


யாரும் எதிர்பார்க்காத வகையில் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷான் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் மிடில் பேட்ஸ்மேன் டேனியல் சாம்ஸ், திலக் வர்மா தொடர்ந்து விக்கெட்டை இழந்த காரணத்தால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் திணறியது மும்பை இந்தியன்ஸ் அணி.
இருப்பினும், டிம் டேவிட் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் டிம் டேவிட் எதிர்பாராத வகையில் ரன் – அவுட் ஆனார். அதனால், மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி ஓவர் வரை போராடி 7 விக்கெட்டை இழந்த நிலையில் 190 ரன்களை மட்டுமே அடித்தனர்.


வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் டிம் டேவிட் 17.3, 17.4, மற்றும் 17.5 போன்ற பந்தில் தொடர்ந்து ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து சன்ரைசர்ஸ் வீரர்களுக்கு பயத்தை காட்டினார்.
அதன்வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது. இருப்பினும் எதிர்பாராத வகையில் 17.6 ஓவர் முடிவில் ரன் – அவுட் ஆனார் டிம் டேவிட். அதனால் தான் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றியை கைப்பற்ற முடியாமல் போனது. வீடியோ :
— Renuga Devi (@RenugaD30190107) May 18, 2022