HomeTrending Newsஇந்த விஷயத்தில் ரோஹித் சர்மா கெட்டிக்காரர் தான் ; அதனால் இந்திய அணிக்கு பல நம்மை...

இந்த விஷயத்தில் ரோஹித் சர்மா கெட்டிக்காரர் தான் ; அதனால் இந்திய அணிக்கு பல நம்மை உள்ளது ; இர்பான் பதான் ஓபன் டாக் ;

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகளில் இலங்கை, இந்திய, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இப்பொழுது நடைபெற்று கொண்டு இருக்கும் சூப்பர் 4 லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனக்க தலைமையிலான இலங்கை அணியும் விளையாடி வருகின்றனர். சமீபத்தில் தான் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார் ரோஹித். அதில் இருந்து இதுவரை சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி பல தொடரில் வெற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.

அதேபோல தான் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, ஆசிய கோப்பையில் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஆமாம், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் தோல்விகளை பெற்ற இந்திய கிரிக்கெட் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றியை கைப்பற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அப்படி நடந்தால் தான் ஆசிய கோப்பை டி-20 போட்டிக்கான இறுதி போட்டியில் இந்திய அணி விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கும்.

இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, ஹர்ஷல் பட்டேல் போன்ற வீரர்கள் அணியில் இல்லாதது பெரிய இழப்பாக தான் தெரிகிறது. அதிலும் குறிப்பாக காயம் காரணமாக ஆசிய போட்டியில் இருந்து விலகினார் ரவீந்திர ஜடேஜா. அதில் இருந்து சரியாக ப்ளேயிங் 11 வீரர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகிறது இந்திய.

ரோஹித் சர்மா கேப்டன்:

ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணிக்கு முன்பு ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்துள்ளார். இதுவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்றுள்ளனர். அதனால் இந்திய அணியையும் வழிநடத்த அவ்வளவு கடினமாக இருக்க வாய்ப்புகள் இல்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் கூறுகையில் ; ” ரோஹித் சர்மா ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். அவரால் நிச்சியமாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். அதுமட்டுமின்றி எந்த நேரத்தில் யாரை பவுலிங் செய்ய வைக்க முடியும் என்று அவருக்கு (ரோஹித்) நன்கு தெரியும் என்று கூறியுள்ளார் இர்பான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img