இவர் தான் அடுத்த தோனி , ஆனால் இன்னும் கடினமான பாதையை கடக்கவேண்டியுள்ளது ; டேனி மோரிசன் பேட்டி ;

0

ஐபியில் டி-20 2022 போட்டிகள் கடந்த வாரம் சனிக்கிழமை அன்று தொங்கியது. இதுவரை வெற்றிகரமாக 8 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிலும் சென்னை அணி இந்த முறை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள்ளது தான் உண்மை.

இதுவரை சென்னை அணி விளையாடிய இரு போட்டிகளிலும் மோசமான நிலையில் தோல்வியை பெற்றுள்ளது. என்னதான் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தாலும், பவுலிங் மிகவும் மோசமான ஒன்றாக மாறியது தான் உண்மை. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் தோனி.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர். தோனிக்கு பிறகு சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா வழிநடத்தி வருகிறார். தோனி என்றால் அனைவர்க்கும் பிடித்த வீரர் என்று சொல்லலாம்.

சமீப காலமாக ரிஷாப் பண்ட் தான் குட்டி தோனி என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை பற்றி பேசிய கிரிக்கெட் போட்டியின் கமென்டரி டேனி மோரிசன் கூறுகையில் ; “எனக்கு தெரிந்து இப்பொழுது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் பட்டியலில் ரிஷாப் பண்ட் தான் முக்கியமான வீரராக திகழ்கிறார்.”

“ஒருபோட்டியில் விளையாடுவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும், எப்படி அணியை வழிநடத்த வேண்டும் என்பதை ஒரு வீரருக்கு முக்கியமான அம்சம். அதுவும் ரிஷாப் பண்ட் எப்பொழுதும் தோனியை போல அமைதியாக விளையாடுவார், அது இன்னும் சிறந்த குணம்.”

ஆனால் ரிஷாப் பண்ட் -ன் கடந்த காலம் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் உண்மை. எப்பொழுதும் ஒரு போட்டியில் எந்த நேரங்களில் எப்படி விளையாட வேண்டும், எந்த நேரத்தில் யார் பேட்டிங் செய்ய வேண்டும், யார் பவுலிங் செய்ய வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்ய வேண்டும். அதனை ரிஷாப் பண்ட் சரியாக அதனை செய்து வருகிறார் என்று கூறியுள்ளார் டேனி மோரிசன்.”

கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி கேபிட்டல்ஸ் அணியை ரிஷாப் பண்ட் தான் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை டெல்லி அணி ஒரு போட்டிகளில் மட்டுமே விளையாடிய நிலையில் அதில் வெற்றி பெற்றுள்ளது. இன்று இரவு மும்பையில் உள்ள மகாராஷ்டிரா மைதானத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளனர்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here