அவ்வளவு சுலபமாக இவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற முடியாது ; பிரைன் லாரா ஓபன் டாக் ;

0

இந்திய அணி :

சில தினங்களுக்கு முன்பு தான் இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒருநாள் போட்டியில் 3 – 0 மற்றும் டி-20 போட்டியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய.

ஆசிய கோப்பை :

வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் ஆசியகோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற அணிகள் உறுதியான நிலையில் இறுதியாக 6வது இடத்தில் எந்த அணி இடம்பெற போகிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

ஆமாம், அதில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஹாங் காங் போன்ற நான்கு அணிகளுக்குள் ஒரே அணி தான் 6வது இடத்தில் இடம்பெற போகின்றனர். சமீபத்தில் தான் ஆசிய கோப்பையில் விளையாட போகின்ற இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

கம்பேக் கொடுப்பாரா விராட்கோலி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட்கோலி அதிரடியாக விளையாடி பல சாதனைகளை செய்துள்ளார். ஆமாம், இதுவரை 70 சதம் அடித்துள்ளார் விராட். ஆனால் இறுதியாக 70வதாவது சதம் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அடித்துள்ளார்.

அதில் இருந்து கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதுமட்டுமின்றி சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் , டி-20 போட்டிகளில் பெரிய அளவில் விராட்கோலியின் பேட்டிங் இல்லை. போர்மில் இல்லாத விராட்கோலி ஏன் ? வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடவில்லை என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்த ஆண்டு இறுதியில் நடைபெற போகின்ற ஆசிய கோப்பையில் தான் விராட்கோலி விளையாட போகிறார். விராட்கோலியின் Formல் இல்லை என்றது பேசும் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும் ஒருசிலர் விராட்கோலியை ஆதரித்து பேசி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவானான பிரைன் லாரா கூறுகையில் ; “விராட்கோலி இனிவரும் போட்டிகளில் சிறந்த வீரராக வெளிவர போகிறார். அதனால் நான் ஒரு வீரராக விராட்கோலியை மதிக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நிச்சியமாக விராட்கோலி பல விஷயங்களை கற்றுக்கொள்வார், அவரை யாராலும் தடுக்கவே முடியாது என்று கூறியுள்ளார்.”

ஆசிய கோப்பையில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுப்பாரா விராட்கோலி ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here