இந்திய அணிக்கு இவரால் தான் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது ; என்ன செய்ய போகிறது இந்திய ? பாகிஸ்தான் முன்னாள் வீரர் கனேரியா பேட்டி ;

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட்கோலி, சமீப காலமாக ரன்களை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார் விராட்கோலி. பின்பு சில ஆண்டுகள் கழித்து அவரது ஆட்டம் மிகவும் அதிரடியாக மாறியது.

அதுமட்டுமின்றி, இதுவரை விராட்கோலி 70 சதம் அடித்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் அதிகபடியான 100 சதம் அடித்துள்ளார். அதனை முறியடிக்க விராட்கோலியால் மட்டுமே முடியும் என்று பலர் கூறியுள்ளார். ஆனால் விராட்கோலி கடந்த 2018ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் இறுதியாக சதம் அடித்துள்ளார்.

அதன்பிறகு மூன்று ஆண்டுகள் ஆகிறது, ஆனால் சதம் அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார். இருப்பினும் விராட்கோலி தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, சமீபத்தில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார் விராட்.

சமீபத்தில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடந்து முடிந்துள்ளது. அதில் விராட்கோலி 11,20 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். பின்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் மூன்றாவது டி-20 போட்டிகளில் விளையாடிய விராட்கோலி 1, 11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிக்கு அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விராட்கோலி சரியாக விளையாடவில்லை, அவருக்கு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா ? என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “அணியில் இருக்கும் முக்கியமான பேட்ஸ்மேன் ஆட்டம் இழந்தும் அணி சிறப்பாக விளையாடி வருகிறது, அப்படியென்றால் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர் என்று அர்த்தம்.”

“அதனால் அந்த நேரத்தில் பெரிய வீரர்கள் அணிக்கு பாரமாக மாறி வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியில் இப்பொழுது விராட்கோலியும். அதனால் அவருடைய இடத்தை மற்ற வீரருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் அல்லது மீண்டும் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுக்க வேண்டும்.”

“விராட்கோலி நிச்சயமாக மீண்டும் சிறப்பாக விளையாடுவார், கம்பேக் கொடுப்பார் என்று பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்திருக்க வேண்டும்.”

“ஆனால் அவரது நேரத்தை வீணடித்து விட்டார்.இப்பொழுது உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது இந்திய அணிக்கு பாரமாக உள்ளார் விராட்கோலி. இது இந்திய அணியாக இருக்கட்டும் ? அல்லது பாகிஸ்தான் அணியாக இருக்கட்டும், அணியில் பெரிய வீரர் இல்லையென்றால் அணி சிறப்பாக விளையாடாது என்று அர்த்தம் கிடையாது என்று கூறியுள்ளார்.”