இந்திய கிரிக்கெட் அணிகள் கடந்த சில மாதங்களாக அனைத்து விதமான சீரியஸ் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆமாம், தென்னாபிரிக்கா, அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தொடரை கைப்பற்றியுள்ளனர்.


இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. ஐபிஎல் போட்டிகளில் அல்லது உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்புகளை கிடைப்பதில் சந்தேகமில்லை. ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அவேஷ் கான், ரவி பிஷானி, அர்சத்தீப் சிங் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்துள்ளனர்.
ஆமாம், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகும் 6 அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
அதுவும் இந்த முறை இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவும், துணை கேப்டனாக கே.எல்.ராகுலும் இந்திய அணியை வழிநடத்த உள்ளனர். இந்த கேப்டன் பற்றிய சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்ந்த நிலையில் விராட்கோலியை அடுத்து 35 வயதான ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.


இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஒரு சில போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா விலக அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் இந்திய அணியின் அடுத்த கேப்டன் யாராக இருக்கும் என்று பலருக்கு பல யோசனை எழுந்துள்ளது.
அதில் ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்டிக் பாண்டியாவின் பெயர்கள் நிச்சியமாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இதில் ஹர்டிக் பாண்டியாவிற்கு தான் முக்கியத்துவம் கொடுக்க படும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்தாவது டி-20 போட்டியில் ஹர்டிக் பாண்டிய தான் இந்திய அணியை வழிநடத்தினார்.
அதில் கேப்டன் பற்றிய பேசிய ஹர்டிக் பாண்டிய ; “கேப்டனாக இருக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக அதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்டு அணியை வழிநடத்துவேன். ஆனால் , இப்பொழுது அது எனக்கு முக்கியமில்லை ஏனென்றால் உலகக்கோப்பை போட்டிகள் வர போகின்றனர். அதனால் ஒரு அணியாக சிறப்பாக விளையாட மட்டுமே நினைத்து கொண்டு வருகிறேன் என்று கூறியுள்ளார் ஹர்டிக்.”


இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற ஐபிஎல் 2022யில் புதிதாக அறிமுகம் ஆன அணிகளுள் ஒன்று தான் குஜராத் டைட்டன்ஸ் அணி. அதன் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய வழிநடத்தி வெற்றிகளை பெற்று வந்தனர். அதுமட்டுமின்றி, ஐபிஎல் 2022 போட்டிக்கான சாம்பியன் படத்தையும் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வென்றுள்ளது.
இதனை பற்றி பேசிய நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில் ; “ஆறு மாதங்களுக்கு முன்பு நாம் ஹர்டிக் பாண்டியவை பற்றி இப்பொழுது பேசுவோம் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. ஹர்டிக் பாண்டிய விளையாடினால் அவர் தான் போட்டியின் வெற்றியாளர்.”
“ஹர்டிக் பாண்டியவிடம் தன்மை மற்றும் ஆளுமை அவரிடம் உள்ளது. கால்பந்து போட்டிகளில் ஒரு வீரருக்கு தன்மை மற்றும் ஆளுமை திறன் இருந்தால் நிச்சியமாக அவர் தான் கேப்டனாக இருப்பார். எனவே, இப்போது துணை கேப்டனாக இருந்தாலும் சரி, எதிர்காலத்தில் கேப்டனாக இருந்தாலும் சரி, ஹர்திக் பாண்டியாவுக்கு இந்தத் தரப்பில் சில தலைமைத்துவம் வழங்கப்படுவதை நான் பொருட்படுத்தவில்லை என்று கூறியுள்ளார் ஸ்காட் ஸ்டைரிஸ்.”