என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியது இவர் தான் ; நன்றி கடனாக இதை செய்ய போகிறேன் ; சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டி இன்று மதியம் மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை நடந்த 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

அதனால் இன்றைய போட்டியில் யார் வெல்ல போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்..! தொடரை கைப்பற்றுமா இந்திய ?

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வரும் வீரர்களில் ஒருவர் தான் சூர்யகுமார் யாதவ். கடந்த ஜூலை மைதானத்தில் இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய காரணத்தால் இந்திய அணியில் இடம் கிடைத்தது. அதில் இருந்து இதுவரை அவரது ஆட்டத்தை எப்பொழுதும் சரியாக விளையாடி வருகிறார். அதனால் இப்பொழுது இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக ப்ளேயிங் 11ல் விளையாடி வருகிறார்.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக மூன்றாவது டி-20 போட்டிகளில் சூரியகுமார் யாதவ் 117 ரன்களை அடித்துள்ளார். இவரது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.

சமீபத்தில் சூரியகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் “எனக்கு தெரிந்து போட்டிகளை பற்றி நாங்க ரொம்ப யோசிக்கமாட்டோம். இன்னும் ஒரு போட்டி எங்கள் கையில் உள்ளது. அதில் தான் எங்களுது முழு கவனமும் உள்ளது.”

“ஆமாம், டி-20 போட்டிகளில் சிறப்பாக தான் விளையாடினோம், அதனால் தொடரை கைப்பற்றியது சந்தோசமாக தான் உள்ளது.ஒருநாள் போட்டிக்கான தொடரிலும் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் இருக்கிறோம். இன்றைய போட்டி சிறப்பாக தான் இருக்கும். மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் வீரர் சூரியகுமார் யாதவ்.”

மேலும் இந்திய அணியின் கேப்டனை பற்றி பேசிய சூரியகுமார் யாதவ் ; “ஐபிஎல் 2018-2019 போட்டிகளில் நானும் ரோஹித் சர்மாவும் அடிக்கடி பேசுவது வழக்கம். எப்படி போட்டியில் விளையாடுவது, போட்டியின் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது போன்ற விஷயங்களை பற்றி யோசிப்பது வழக்கம்.”

“அவர் எப்பொழுது மைதானத்தில் இருந்தாலும் எனக்கு நம்பிக்கையாக இருக்கும். அதுமட்டுமின்றி, நான் அவரிடம் பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். அவர் என்மேல் அதிக நம்பிக்கை வைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அந்த நம்பிக்கை-க்கு கைமாறாக நான் ரன்களை அடித்து, அணிக்காக போட்டியில் வெல்ல காரணமாக இருப்பேன் என்று கூறியுள்ளார் சூரியகுமார் யாதவ்.”

இந்திய அணியின் மிடில் ஆர்டரில் பேட்டிங் சூரியகுமார் யாதவ், இந்தியா அணிக்கு முக்கியமான ப்ளேயிங் 11 வீர்ரா ?? உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற்றால் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதா ? உங்கள் கருத்தை மறக்காமல் கீழே உள்ளே COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here