ரெய்னா இல்லை ; ஜடேஜா இல்லை; சிஎஸ்கே அணியில் இருவருக்கு ஸ்பெஷல் திறமை இருக்கிறது ; யுவ்ராஜ் சிங் .. யார் அது ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வீரரை பற்றி யுவராஜ் சிங் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்…?? யார் அது தெரியுமா ??

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்த படி டி-20 ஐபிஎல் 2021 ஆரம்பித்து சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதற்கு காரணம் ஐபிஎல் போட்டி என்றாலே விறுவிறுப்பான போட்டிக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்பது தான் உண்மை.

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணி , தொடக்கத்தில் சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பரிஸ்டோவ் 7 ரன்களில் ஆட்டம் இழக்க, பின்பு வார்னர் மற்றும் மனிஷ் பாண்டேவின் பார்ட்னெர்ஷிப் போட்டியை விறுவிறுப்பாக மாற்றியுள்ளது. நிர்ணயக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்த நிலையில் 171 ரன்களை அடித்துள்ளனர்.

அதில் வார்னர் 55 பந்தில் 57 ரன்கள், பரிஸ்டோவ் 5 பந்தில் 7 ரன்கள், மனிஷ் பாண்டே 46 பந்தில் 61 ரன்கள்,வில்லியம்சன் 10 பந்தில் 26 ரன்கள் மற்றும் கெதர் ஜாதவ் 4 பந்தில் 12 ரன்கள் என்ற கணக்கில் ரன்களை குவித்துள்ளனர். பின்பு 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

18.3 ஓவர் முடிவில் 173 ரன்களை விளாசி வெற்றியை கைப்பற்றியது சிஎஸ்கே. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 44 பந்தில் 75 ரன்கள், டுப்ளஸிஸ் 38 பந்தில் 56 ரன்கள், மொயின் அலி 8 பந்தில் 15 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 6 பந்தில் 7 ரன்கள், சுரேஷ் ரெய்னா 15 பந்தில் 17 ரன்கள் என்ற கணக்கில் அடித்துள்ளனர்.

வெற்றியை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டியில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் முதல் இடத்திலும், இறுதி இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியை பற்றி பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான யுவ்ராஜ் சிங் அவரது கருத்தை பகிர்ந்துள்ளார் ; சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான ஓப்பனிங் பேட்ஸ்மேன் அமைந்துள்ளது. அதிலும் ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ஸ்பெஷல் திறமை உள்ளது என்று அவரது கருத்தை கூறியுள்ளார்.

அவர் சொன்னது போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வலுவான ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. இதுவரை ருதுராஜ் கெய்க்வாட் 6 போட்டிகளில் விளையாடி 195 ரன்களை அடித்துள்ளார். அதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 75 ரன்களை விளாசியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில், 24 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.