இதை பற்றி நான் யோசிக்கவே இல்லை ; எனக்கு அதிக நம்பிக்கை கொடுத்தது இவர் தான் ; ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி ;

372 ரன்களை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய அணி, கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ட்ராவில் முடிந்தது. ஆனால் மாஸ் ஆக விளையாடிய இந்திய அணி வெற்றியை கைப்பற்றியது.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன மாடுகள் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ஸ்ரேயாஸ் ஐயர், ” நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை மறக்கவே முடியாது. ஏனென்றால், நான் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளேன்.

அதுமட்டுமின்றி, நான் என்னுடைய இடத்தை இந்திய அணியில் தக்கவைத்து கொள்ள அதிக ஆர்வம் காமிக்கவில்லை. ஏனென்றால் என்னைவிட அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் என்னை அதிகம் நம்புகிறார்.

அவர் (ராகுல் டிராவிட்) இந்திய அணியின் பயிற்சியாளராக இணைந்தது மிகவும் சந்தோசமாக தான் இருக்கிறது. அதுமட்டுமின்றி, அவரை நான் இந்திய அணி A பிரிவில் இருந்து அவரை பார்த்து வருகிறேன். அதனால் எனக்கும் அவருக்கும் நல்ல ஒற்றுமை இருக்கிறது என்று கூறியுள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

போட்டியின் விவரம் இதோ ;

மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல் தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி அசத்தலாக ரன்களை குவித்தனர்.

அதனால் 109.4 ஓவர் முடிவில் 325 ரன்களை அடித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 150, சுமன் கில் 44, அக்சர் பட்டேல் 52 ரன்களையும்அடித்துள்ளனர். பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூஸிலாந்து அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் டி-20 போட்டி போல, சுருக்கமாக விளையாடி 28.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது 62 ரன்களை மட்டுமே அடித்துள்ளது நியூஸிலாந்து அணி. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணி 267 ரன்களை அடித்த நிலையில் Declare செய்தது இந்திய அணி.

பின்னர் 400+ ரன்களை அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. ஏனென்றால் 167 ரன்களை அடித்தநிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது நியூஸிலாந்து அணி. அதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வென்றது இந்திய.