கடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்தியா அணி 5 போட்டிகளில் மூன்று போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்தியா. முதலில் நடந்த நான்கு போட்டிகளில் தல இரு போட்டிகளிலும் இரு அணிகளும் வென்றுள்ளது.
5வது போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களே கோப்பையை கைப்பற்றும் நிலைமை ஏற்பட்டது. டாஸ் இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தனர். ஓப்பனிங் பேட்டிங் செய்த இந்தியா வீரர்கள் 20 ஓவரில் 224 ரன்களை எடுத்துள்ளனர்.
225 எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் காலம் இறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்கள் தொடக்கத்தில் சரியான ஆட்டம் அமையவில்லை, ஏனென்றால் ஜேசன் ராய் ஒரு ரன்கள் கூட அடிக்காமல் ஆட்டம் இழந்தனர். இருந்தாலும் அதன்பின்னர் இறங்கிய வீரர்கள் சரமாரியாக அடித்து 100க்கு மேல் ரன்களை குவித்தனார் ஜோஸ் பட்லர் மற்றும் மலன்.
இறுதிவரை போராடிய இங்கிலாந்து அணியினர் 20 ஓவர் முடிவில் 188 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் இந்தியா கிரிக்கெட் அணி 36 ரன்கள் விதியசத்தில் இங்கிலாந்து அணியை வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இதையும் படியுங்க : உலகக்கோப்பை போட்டியில் நடராஜன் விளையாடுவாரா? கோலி அதிரடி விளக்கம்
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த வீரர் கண்டிப்பாக விளையாட வேண்டும் ; கவுதம் கம்பிர் கூறியுள்ளார் … யார் அந்த வீரர்?
கடந்த போட்டிகளில் கே.எல்.ராகுல் 4 டி-20 போட்டிகளில் விளையாடி வெறும் 16 ரன்களை மட்டுமே எடுத்துள்ளனர். அதனால் அவரை இறுதி டி-20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இந்தியா அணியின் கேப்டன் விராட் கோலி ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கினார்.
அதன் விளைவாக இறுதி டி-20 போட்டியில் 80 ரன்கள் அடித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை விளையாடினார். இதனை வைத்து முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் கவுதம் கம்பிர் ; கே.எல்.ராகுலுக்கு மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் வாய்ப்பு தர வேண்டும்.
உலக கோப்பை வென்ற இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த நேரத்தில் ராகுலை விடுவது அவருக்கு நம்பிக்கை அளிக்காது. பல முறை வாய்ப்புகள் குடுத்து அவர் அதனை பயன்படுத்தவில்லை என்றால் அவரை அணியில் இருந்து நீக்கலாம்.
ஆனால் இப்பொழுதே அவரை அணியில் இருந்து விலகி வெளியில் உட்காரவைப்பது அவரது நம்பிக்கையை அளிக்கும் என்று கவுதம் கம்பிர் கூறியுள்ளார். அணியில் இருந்து வெறியேற்றுவது நன்மை செய்வது போல கிடையாது. ராகுல் வருகின்ற மூன்று போட்டிகளில் விளையாட வேண்டும்.
யாரவது ஒழுங்கா விளையாடவில்லை என்றால் அவர்களுக்கு பல வாய்ப்புகள் கொடுத்து அவர்கள் மீண்டும் அணியில் தக்கவைக்க வேண்டும். ஏனென்றால் அணியில் விளையாடாமல் இருப்பது , நன்றாகவே இருக்கது என்பது நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி இறுதி டி-20 போட்டியில் 6 பௌலர்க்கு பதிலாக ராகுல் அணியில் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார் கவுதம் கம்பிர்.