CSK அணியில் ஒரு சின்ன வீக்னெஸ் கூட இல்லாத வீரர் இவர் தான் ; மொயின் அலி புகழாரம் ; முழு விவரம் இதோ ;

ஒருவழியாக பல தடைகளை தாண்டி ஐபிஎல் 2021 கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுவும் நேற்று முன்தினம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஈயின் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதனால் இறுதி வரை அதிரடியாக விளையாடி 192 ரன்களை அடித்தனர்.

அதில் ருதுராஜ் கெய்க்வாட் 32, டூப்ளஸிஸ் 86, ராபின் உத்தப்பா 31, மொயின் அலி 37 போன்ற ரன்களை விளாசினார்கள். பின்னர் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் சிறப்பாக அமைந்தது.

அதிலும் 10 ஓவர் முடியும் வரை எந்த விக்கெட்டையும் இழக்காமல் பேட்டிங் செய்தனர். அதனால் சிஎஸ்கே அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று தொலைவில் சென்றது. பின்னர் வெங்கடேஷ் ஐயர், சுமன் கில் ஆட்டம் இழந்த உடன் கொல்கத்தா அணியால் சரியாக ரன்களை அடிக்க முடியாமல் போனது.

ஆனால் இறுதிவரை போராடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 9 விக்கெட்டை இழந்து 165 ரன்களை மட்டுமே அடித்துள்ளனர். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ஐபிஎல் டி-20 வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

போட்டி முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டரான மொயின் அலி அளித்த பேட்டியில் ; இப்பொழுது நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, சிஎஸ்கே அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆன ருதுராஜ் கெய்க்வாட் – க்கு ஒரு சின்ன வீக்னெஸ் கூட இல்லை. அவர் எப்பொழுதும் பொறுமையாக தான் இருப்பார். எனக்கு தெரிஞ்சு நிச்சியமாக எதிர்காலத்தில் ருதுராஜ் கெய்வாட் இந்திய அணிக்காக விளையாடுவார்.

ஏனென்றால் அதற்கான திறமை முழுமையாக உள்ளது தான் உண்மை. அதுமட்டுமின்றி, நான் 2 போட்டிகளில் விளையாடவில்லை, இருந்தாலும் மீதமுள்ள போட்டிகளில் எனக்கு வாய்ப்பு கொடுத்து சிஎஸ்கே வீரர்கள் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் மொயின் அலி.