தோனி இல்லையா ; ஹெலிகாப்டர் ஷாட் தோனிக்கு முன்னாள் இவர் தான் அடித்துள்ளார்..! அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்…!

தோனி இல்லையா ; ஹெலிகாப்டர் ஷாட் தோனிக்கு முன்னாள் இவர் தான் அடித்துள்ளார்..! அதிர்ச்சியில் தோனி ரசிகர்கள்…!

இந்திய அணியின் சிறந்த கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் ஆன மகேந்திர சிங் தோனி, கடந்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் அவர் சர்வதேச போட்டியில் இருந்து விலகியதாக அவரது முடிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். அதனை பார்த்தால் கிரிக்கெட் ரசிகர்கள் தோனி ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார்.

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரை கேப்டன் ஆக பாக்கலாம் என்று ரசிகர்கள் சமாதான படுத்தியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக போட்டியை பார்ப்பதை விட தோனிக்காக போட்டிகளை பார்க்கும் கூட்டம் தான் அதிகம் அதில் எந்த சந்தேகமும் இல்லை.

தோனி என்றாலே ஹெலிகாப்டர் ஷாட் தான் ரசிகர்களுக்கு நியாபகத்திற்கு வரும். அதில் தோனி, 2011ஆம் ஆண்டு இறுதி போட்டியில் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து இந்திய அணியை வெற்றிக்கு வழிவகுத்தார் தோனி. இந்திய அணிக்கு நீண்ட கழித்து தோனி தலைமையில் இந்திய அணிக்கு உலக கோப்பையை கைப்பற்றி கொடுத்தார் தோனி.

சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியானது. அதில் முன்னாள் இந்திய அணியின் கேப்டனான முகம்மது ஆஷாருதீன், 1985 இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில் ஒரு ஓவரில் ஹெலிகாப்டர் ஷாட் போல தொடர்ந்து 5 பவுண்டரிகளை விளாசியுள்ளார். அதன் வீடியோ இப்பொழுது வைரலாக பரவி வருகிறது.

இதுவரை முகம்மது ஆஷாருதீன், 99 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 334 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 15000 ரன்களை எடுத்துள்ளார். அதில் 29 சதம் மற்றும் 79 அரைசதம்அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.