ரிஷாப் பண்ட் -க்கு இவர் எவ்வளவோ மேல் ; இந்திய அணி வெற்றி பெற வேண்டுமென்றால் இவர் அணியில் இருந்தே ஆக வேண்டும் ;

0

நியூஸிலாந்து : நாளை காலை நடைபெற உள்ள போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளனர். இதற்கு முன்பு நடைபெற முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி வென்ற நிலையில் இரண்டாவது போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் இந்தியா அணி வென்றால் மட்டுமே தொடர் ட்ராவில் முடியும்.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். எப்பொழுது எந்த தொடராக இருத்தலும் அதிகபட்சமாக 15 வீரர்களை மட்டுமே இந்திய அணியில் இருந்து அனுப்புவது வழக்கம். அதில் ப்ளேயிங் 11 தேர்வு செய்வது மிகவும் கடினமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, முதல் போட்டியில் விளையாடும் வீரர்கள் தான் அந்த தொடர் முழுவதும் விளையாடுவது வழக்கம்.

ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைத்தும், அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் சில வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் ரிஷாப் பண்ட். கடந்த சில போட்டிகளாகவே ரிஷாப் பண்ட் -ன் பங்களிப்பு இந்திய அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சமீபத்தில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரிஷாப் பண்ட் வெறும் 6,11 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி முதல் ஒருநாள் போட்டியில் வெறும் 15 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் ரிஷாப் பண்ட்.

அதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன்-க்கு வாய்ப்பு கொடுக்கும் படி ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அவரவர் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல தான் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரான சைமன் டௌல் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இவர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதில் “ரிஷாப் பண்ட் சாதாரணமாக 30 ஒருநாள் போட்டிக்குள் தான் விளையாடிருப்பார். ஒரு போட்டிக்கு 35 ரன்கள் கணக்கில் அடித்துள்ளார் ரிஷாப்.”

“ஆனால் சஞ்சு சாம்சன் 11 போட்டிகளில் விளையாடி 60 ரன்கள் சராசரி அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி விக்கெட் கீப்பிங்-ல் எந்த பிரச்சனையும் கிடையாது. அதனால் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவதில்லை எந்த பிரச்சனையும் இருக்காது.” எனக்கு ரிஷாப் பண்ட் ஆ ? சஞ்சு சாம்சன் ஆ ? என்ற கேள்வி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ரிஷாப் பண்ட் பற்றி அதிகம் பேச வேண்டும். ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் ரிஷாப் பண்ட் பெரிய அளவில் விளையாடுவது இல்லை. “

“ஆனால் டெஸ்ட் போட்டிகளில் வெறித்தமான வீரர் தான் ரிஷாப். அதில் விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனாக விளையாடுவதில் எந்த சிக்கலும் கிடையாது. ஆனால் ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் இவரது பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்று கூறியுள்ளார் சைமன்.”

ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் இடப்பெற வேண்டுமா ? இதுவரை சஞ்சு சாம்சன் 11 ஒருநாள் போட்டியில் விளையாடிய 330 ரன்களை விளாசியுள்ளார். அதில் சராசரியாக ஒரு போட்டிக்கு 66 ரன்கள் என்ற கணக்கில் அடித்துள்ளார். ரிஷாப் பண்ட் இதுவரை 29 ஒருநாள் போட்டியில் விளையாடி 855 ரன்களை அடித்துள்ளார். அதாவது சராசரியாக ஒரு போட்டிக்கு 35 ரன்கள் என்ற கணக்கில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here