பையன் பட்டைய கிளப்பிட்டு இருக்கான் ; இதுதான் மாஸ் கம்பேக் ; இந்திய அணிக்கு ஆல் – ரவுண்டர் கிடைத்தாச்சு ; முன்னாள் தேர்வாளர் பிரசாத் உறுதி ;

0

ஐபிஎல் : கடந்த 26ஆம் தேதி முதல் ஐபிஎல் 2022 போட்டிகள் தொடங்கியது. 2008ஆம் தேதி முதல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் இப்பொழுது சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றது.

இதுவரை 16 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டு ஐபிஎல் டி-20 போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிகள் அறிமுகம் ஆகியுள்ளது. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார் ஹார்டிக் பாண்டிய.

என்னது ஹார்டிக் பாண்டியவா ?

ஆமாம், கடந்த ஆண்டு ஹார்டிக் பாண்டியாவுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் சரியாக பேட்டிங் , பவுலிங் செய்ய முடியவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற போட்டியில் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் ஹார்டிக் பாண்டிய இடம்பற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதன்பின்னர் இலங்கை, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில்
ஹார்டிக் பாண்டிய இடம்பெறவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்பொழுது தான் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் ஹார்டிக் பாண்டிய.

பாண்டிய தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஹார்டிக் பாண்டியவை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் அணி தேர்வாளரான பிரசாத் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் ” ஹார்டிக் பாண்டிய எப்பொழுது சிறப்பாக விளையாடினாலும், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். அவர் விளையாடும் போது என்னுடைய பையன் சிறப்பாக விளையாடுவது போல தான் இருக்கிறேன். அதுமட்டுமின்றி, கபில் தேவ்-க்கு பிறகு இந்திய அணியில் இருக்கும் சிறப்பான ஆல் – ரவுண்டர் இவர் தான்.”

“அவரது விளையாட்டு (பவுலிங், பேட்டிங், பீல்டிங்) போன்ற விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறார். இப்பொழுது மட்டுமின்றி இனிவரும் போட்டிகளில் அதனை சரியாக செய்தால் சிறப்பாக இருக்கும். எனக்கு நம்பிக்கை உள்ளது ஹார்டிக் பாண்டிய ஒரு சிறந்த ஆல் -ரவுண்டர்.”

“ஹார்டிக் பாண்டிய முன்புபோல இல்லை, இப்பொழுது அவருக்கு கல்யாணம் ஆகியது. அதுமட்டுமின்றி இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவரது பங்களிப்பு நிச்சியமாக இந்திய அணியில் விளையாட அதிக நன்மை உள்ளது. குஜராத் அணியில் அவரது பேட்டிங், பவுலிங் மற்றும் சக வீரர்களை பீல்டிங் செய்வது மிகவும் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் பிரசாத்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here