கோலி, ரோகித் இல்லை ; இவர் தான் இந்திய அணியின் சூப்பர்ஸ்டார் ; இவரால் உலகக்கோப்பையை வெல்ல முடியும் ; ஷேன் வாட்சன் பேட்டி ;

0

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் கடந்த 16 ஆம் தேதி முதல் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான போட்டிக்கு பஞ்சம் இருக்காது.

இன்று மதியம் 12:30 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் மோத உள்ளனர். இந்த இரு அணிகளுக்கு இடையே இதுவரை இரு போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் இந்திய அணி தான் 2 போட்டிகளில் வென்றுள்ளனர்.

அதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி வெல்ல அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் அவ்வப்போது மழை காரணத்தால் போட்டிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. ஒருவேளை மழை வந்தால் இந்திய அணிக்கு சவாலாக கூட இருக்க வாய்ப்புகள் உள்ளன.

இந்திய மற்றும் பாகிஸ்தான் (தீரில் வெற்றி)

மூன்று தினங்களுக்கு முன்பு தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 160 ரன்களை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் தீரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

அதனை பற்றி இன்னும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி பேசி வருகின்றனர். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் இந்திய கிரிக்கெட் அணி வென்றதிற்கு முக்கியமான காரணம் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவின் பார்ட்னெர்ஷிப் தான் என்பதில் சந்தேகமில்லை.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரரை பற்றி ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” எனக்கு தெரிந்து ஹர்டிக் பாண்டியாவிற்கு அதிகமான திறமை உள்ளது. பவுலிங் செய்து விக்கெட்டையும் எடுக்கவும் முடியும், அதிகமான ரன்களை அடிக்கமுடியும்.”

“அதுவும் பவுலிங்-ல் 140 கீ.மி வேகத்தில் வீசுவது சிறப்பான விஷயம் தான். ஹர்டிக் பாண்டிய வெறும் பினிஷர் மட்டுமில்லை, சிறந்த அதிரடியான வீரர் தான். அவரிடம் அனைத்து விதமான திறமையும் இருக்கிறது. கடந்த ஐபிஎல் 2022ல் அவரது விளையாட்டை நாம் அனைவரும் பார்த்துள்ளோம், அதனால் இந்த உலகக்கோப்பை அவருக்கான போட்டி. ஹர்டிக் பாண்டிய தான் போட்டியின் வெற்றியாளர் என்று புகழ்ந்து பேசியுள்ளார் ஷேன்வாட்சன்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here