WTC 2021: வருகின்ற ஜூன் 18ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் – யின் இறுதி போட்டி நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் யார் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்ற போவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இதில் இந்திய மற்றும் நியூஸிலாந்து ஆகிய இருஅணிகளும் மோத உள்ளன.
ஜூன் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் சீரியஸ் போட்டிகள் நடைபெற உள்ளது. சமீபத்தில், பிசிசிஐ இந்திய அணியின் விவரத்தை கூறியுள்ளது.
இந்திய அணியின் விவரம் இதோ:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ரஹானே (துணை கேப்டன்), புஜாரா, மயங்க அகர்வால், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ராஹ்,ரிஷாப் பண்ட், ரவி சந்திரா அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷாமி, முகமது சிராஜ், தாகூர், உமேஷ் யாதவ் கே.எல்.ராகுல், சஹா இடம் பெற்றுள்ளனர்.
இதில் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. அதனால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவர் அணியில் இல்லாதது பற்றி கருது தெரிவித்து வருகின்றனர். அதேபோல இந்திய அணியின் முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் அவரது கருத்தை கூறியுள்ளார்.
ராகுல் டிராவிட் கருத்து ;
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் ; கடந்த சில ஆண்டுகளாக குல்தீப் யாதவின் ஆட்டம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று டெஸ்ட் சீரியஸ் போட்டியில் இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார்.
ஆனால் இப்பொழுது இந்திய அணியில் நான்கு சூழல் பந்து வீச்சாளர் இடம்பெற்றுள்ளனர். அதில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ரவி சந்திரா அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 27 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் அக்சர் பட்டேல்.
அதுமட்டுமின்றி ஜடேஜா, அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற வீரர்களுக்கு பவுலிங் மட்டுமில்லாமல் பேட்டிங் செய்து சில ரன்களையும் அவர்களால் எடுக்க முடியும். அதனால் தான் பிசிசிஐ இந்த முடிவு வந்திருக்கும். பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ள 20 பேர் கொண்ட இந்திய அணி மிகவும் சிறப்பான வீரர்கள் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.