ஐபிஎல் :
ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது. பின்பு ரசிகர்களின் ஆதரவை பெற்று இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் நடந்து கொண்டு வருகின்றனர். இதுவரை வெற்றிகரமாக 15 ஆண்டுகள் நடந்து முடிந்துள்ளது.


சென்னை அணி:
ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணிகளுள் ஒன்று தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை வெற்றிகரமாக நான்கு முறை கோப்பையை வென்றுள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளாக சென்னை அணியில் பல குழப்பங்கள் எழுந்துள்ளது. ஏனென்றால் ஐபிஏஎல் 2020 சுரேஷ் ரெய்னாவுக்கும் சென்னை அணியின் நிர்வாகத்திற்கும் சில கருத்துவேறுபாடுகள் எழுந்தன. பின்பு 2021ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவின் விளையாட்டு மோசமாக இருந்த காரணத்தால் அணியில் இருந்து காயம் என்ற காரணத்தை காட்டி வெளியேற்றினார்கள்.
பின்பு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவை தக்கவைத்துக்கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி ஐபிஎல் 2022ல் சுரேஷ் ரெய்னாவை யாரும் கைப்பற்றாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி :
தோனி இன்னும் சில ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு ஓய்வு பெறப்போகிறார். அதனால் ஐபிஎல் இந்த ஆண்டு ஐபிஎல் 2022 ஆரம்பிக்கும் முன்பு ஜடேஜாவை கேப்டனாக நியமனம் செய்தது சென்னை அணி. இருப்பினும் தோனியின் உதவியால் சென்னை அணியை வழிநடத்தி வந்தார்.
ஆனால் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் போனது. அதுமட்டுமின்றி ஜடேஜாவும் ஆல் – ரவுண்டராக சிறப்பாக விளையாட முடியாமல் போனது. அதனால் உடனடியாக கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள். இப்பொழுது ஜடேஜா அவரது சமூகவலைத்தளங்களில் சென்னை அணி பற்றிய பதவிகளை டெலிட் செய்துள்ளார். இதனால் அடுத்த வரும் ஆண்டுகளில் நிச்சியமாக ஜடேஜா சென்னை அணிக்காக விளையாட வாய்ப்பு இல்லையென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


அதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக அந்த இடத்தில் சுரேஷ் ரெய்னா இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சியமாக சென்னை அணி அடிமட்ட விலையான 2 கோடி கொடுத்து சென்னை அணி கைப்பற்ற அதிக வாய்ப்புகள் உள்ளது.
சென்னை அணியில் ஜடேஜா விளையாடுவாரா ?? இல்லையா ???