இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டிக்கான தொடரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றுள்ளது பங்களாதேஷ் அணி.


அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது பங்களாதேஷ் அணி. இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதனால் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் தொடரும் குழப்பம்:
எப்பொழுதும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ தவறியதே கிடையாது. ஐபிஎல், விஜய் ஹசாரே போன்ற தொடர்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால் கொடுக்கும் வாய்ப்பை சிலர் சரியாக பயன்படுத்துவதும் இல்லை. அதில் இவர்கள் தான் (கே.எல்.ராகுல் மற்றும் ரிஷாப் பண்ட் ).


ஆமாம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி-20 ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல்.ராகுலின் பங்களிப்பு இந்திய அணிக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. அதேபோல தான் ரிஷாப் பண்ட் -ம், ஏனென்றால் சமீபத்தில் நடந்து முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடரில் பெரிய அளவில் பங்காளிக்கவில்லை. அதனால் இந்திய கிரிக்கெட் அணியில் இவர்களின் ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர் கூறுகையில் : “5வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார் கே.எல்.ராகுல். ஏனென்றால் தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ரோஹித் சர்மா விளையாடி வருகின்றனர். 3வது இடத்தில் விராட்கோலி இருக்கிறார். அதனால் 5வதாக பேட்டிங் செய்வது இவருக்கு சரியான இடமாக தான் இருக்கும். “


“ஏனென்றால் மிடில் – ஆர்டர்களில் விக்கெட்டை தக்கவைத்து கொண்டு சிறப்பாக விளையாட கூடிய திறன் இவருக்கு உள்ளது. அதனால் கே.எல்.ராகுலை போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் மற்றுமின்றி அவரது ஷாட்ஸ்-ம் அற்புதமாக இருக்கிறது. இதெல்லாம் தான் இந்திய அணியின் பினிஷராக விளையாட கூடிய தகுதி (5 அல்லது 6வது இடத்தில்) என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.”
ரிஷாப் பண்ட் -ஐ காட்டிலும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடினால் சிறப்பாக இருக்குமா ? உங்கள் கருத்து என்ன ?