இன்று இரவு 8 மணியளவில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இரண்டாவது டி-20 போட்டிகளில் இன்று விளையாட போகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.


இன்றைய போட்டி வார்னர் பார்க் மைத்தனத்தில் நடைபெற உள்ளது. அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் டி-20 போட்டியில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் மட்டும் தான் ரன்களை அடித்தனர்.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் உள்ளது தான் உண்மை. ஏனென்றால், விராட்கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறாத காரணத்தால் அவருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று விளையாடி வருகிறார்.
இருப்பினும் அவ்வப்போது போட்டிகளில் ரன்களை அடித்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ச்சியாக எந்த போட்டிகளிலும் விளையாடுவது இல்லை. அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை எதிர்கொள்வதில் அவருக்கு சிரமமாக உள்ளது. பவுசர் அல்லது வேகப்பந்துகளில் அதிகமாக விக்கெட்டை இழந்து வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர்.


இந்த ஆண்டு உலகக்கோப்பை டி-20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெற உள்ளது. அங்கு வேகப்பந்து வீச்சாளருக்கு தான் உகந்த இடமாக இருக்கும். அதனால் நிச்சியமாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு அங்கு விளையாட கடினமாக தான் இருக்கும். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்துள்ளார்.
அதனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா இடம்பெற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. என்னதான் மிடில் ஆர்டரில் கோலி இடம்பெற்றால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடாவிற்கு இடம்கிடைப்பது சிரமம் தான். இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயரை காட்டிலும் தீபக் ஹூடா பரவாயில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். பின்பு வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி விளையாடி வந்துள்ளார். அதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடா தான் விளையாட வேண்டுமென்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.