இவர் இல்லாமல் இந்திய கிரிக்கெட் அணி எப்படி ? ப்ளேயிங் 11ல் இவர் இருந்தால் தான் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் ; முன்னாள் வீரர்கள் கருத்து ;

0

ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் விளையாடி வருகின்றனர்.

எப்பொழுதும் சீரியஸ் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் அதிகம் தான். ஆனால் ஐசிசி போன்ற தொடரில் மிகவும் மோசமான நிலையில் தான் விளையாடி வருகின்றனர். ஆனால் இந்த முறை ஆசிய கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகளை எதிர்த்து விளையாடியுள்ளது.

அதில் வெற்றியை கைப்பற்றி சூப்பர் 4 லீக் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மிகவும் தீரில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய. அதில் இந்திய அணியின் முன்னணி வீரரான ரிஷாப் பண்ட் இல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

ப்ளேயிங் 11ல் இருக்க வேண்டிய ரிஷாப் பண்ட் ஏன் இல்லை ? அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா ; தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பண்ட் ஆகிய இருவரில் ஒருவரை தான் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அதனால் இந்த முறை தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு கொடுத்தோம் என்று கூறினார்.”

ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மோசமான நிலையில் ஆட்டம் இழந்தால் அந்த நேரத்தில் ரிஷாப் பண்ட் தான் பல போட்டிகளில் ரன்களை அடித்துள்ளார். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜடேஜா கூறுகையில் ; “நாளுக்கு நாள் ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பிங் சிறப்பாக உள்ளது. எனக்கு தெரிந்து அவரை போன்ற வேறு எந்த பேட்ஸ்மேனும் அனைத்து விதமான போட்களிலும் விளையாடுவதில்லை.”

“இந்திய அணியிக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை ஐசிசி போட்டிகளில் வெற்றிகளை பெறுவது இல்லை. பெரிய போட்டிகளில் வெற்றி பெற வேண்டுமென்றால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட வேண்டும். ஆனால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்தால், இந்த நேரத்தில் ரிஷாப் பண்ட் விளையாடுவது முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் ஜடேஜா.”

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; “அதனால் ப்ளேயிங் 11ல் நிச்சியமாக இடம்பெற வேண்டும். ரிஷாப் பண்ட் தான் போட்டியை எப்படி வேண்டுமானாலும் மாற்றியமைக்க கூடிய திறன் உள்ளது. அதுமட்டுமின்றி இடது, வலது கை பேட்ஸ்மேன்களின் கம்போவாக விளையாட காரணமாக இருப்பார்.

அதற்கு நான் கே.எல்.ராகுலை குறை சொல்லவில்லை. ஆனால் அவர் இப்பொழுது தான் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். குறுகிய போட்டிகளில் விளையாடிய நிலையில் எப்படி இன்னும் சில மாதங்களில் நடக்க போகும் உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட முடியும் என்று கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here