இங்கிலாந்து அணிக்கு எதிரான Semi-Final போட்டியில் இவர் இருந்தால் இந்தியாவிற்கு கூடுதல் பலம் தான் ; முன்னாள் வீரர் உறுதி ;

0

நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளனர். அதில் இவர் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும், இந்தியாவிற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி கூறியுள்ளார்..!

indian Team 2

இந்திய கிரிக்கெட் :

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் மிகவும் அதிரடியாக மாறியுள்ளது. ஆனால் பவுலிங் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியிக்கு ஆபத்தாகவே இருந்தது. ஏனென்றால், பும்ரா, ரவீந்தர ஜடேஜா போன்ற வீரர்கள் காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெற முடியாமல் போனது.

இருந்தாலும் அர்ஷதீப் சிங், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்து வருகின்றனர். தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் விளையாடி வருவதால் வாய்ப்பை இழந்து தவிக்கும் இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்.. ! யார் அந்த வீரர் ??

25 வயதான ரிஷாப் பண்ட் -க்கு சமீப காலமாகவே இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதில்லை. அதற்கு முக்கியமான காரணம் தினேஷ் கார்த்திக் தான். ஐபிஎல் 2022ல் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக்-க்கு தீடிரென்று இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

அதனால் விக்கெட்-கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷாப் பண்ட் -க்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் தினேஷ் கார்த்திக் பங்களிப்பு இந்திய அணியிக்கு உதவியாக இருந்ததா என்று கேட்டால் ? இல்லை என்பது தான் பதில். அதனால் அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் இடம்பெற்றிருந்தால் கூடுதல் பலமாக இருந்திருக்கலாம்.

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் இந்திய மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. அதில் தினேஷ் கார்த்திக்-கு பதிலாக ரிஷாப் பண்ட் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனால் அடுத்து நடைபெற உள்ள அரையிறுதி போட்டியிலும் ரிஷாப் பண்ட் விளையாட வாய்ப்பு உள்ளன.

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரியின் கருத்து :

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் -க்கு ஆதரவாக பேசியுள்ளார் ரவி சாஸ்திரி. அதில் ” நிச்சியமாக தினேஷ் கார்த்திக் ஒரு சிறந்த வீரர் தான். ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டி என்ற நிலை வரும்போது நிச்சியமாக இடது கை பேட்ஸ்மேன் (ரிஷாப் பண்ட்) நிச்சியமாக போட்டியின் வெற்றியாளராக இருக்கலாம்.”

“இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் சிறப்பாக விளையாடியுள்ளார். சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரிஷாப் பண்ட் காரணத்தால் இந்திய அணி வென்றுள்ளனர். அதனால் நான் ரிஷாப் பண்ட் -ஐ தான் அரையிறுதி சுற்றுக்கு தேர்வு செய்வேன். அவர் (ரிஷாப் பண்ட்) அங்கு விளையாடினார் என்பதற்காக சொல்லவில்லை.”

“ஆனால் நிச்சியமாக X – factor ஆக இருப்பார். இந்திய அணியில் பல வலது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அதனால் எப்படி பவுலிங் செய்தால் கட்டுப்படுத்த முடியும் என்று நன்கு தெரியும். இதே இங்கிலாந்து அணியில் இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன்கள் மாறி மாறி விளையாட கூடிய சூழ்நிலையில் இருக்கின்றனர்.”

“அதனால் நிச்சியமாக இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் (ரிஷாப் பண்ட்) தேவை. நிச்சியமாக இந்திய அணியில் முதல் மூன்று அல்லது நான்கு விக்கெட்டை இழந்தாலும் இவரால் போட்டியை வழிநடத்தி வெற்றி பாதைக்கு கொண்டு செல்வார் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here