இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஒருநாள் தொடர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி 3 – 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வாஷ் அவுட் செய்தனர்.


இப்பொழுது டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 190 ரன்களை விலகினார்கள். பின்பு 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆனால் 122 ரன்களை அடித்த காரணத்தால் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதனால் 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. முதல் டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பண்ட் மற்றும் ஹர்டிக் பாண்டிய போன்ற வீரர்கள் பெரிய அளவில் விளையாடவில்லை என்பது தான் உண்மை.


இனிவரும் போட்டிகள் நிச்சியமாக அனைவருக்கும் மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் இன்னும் இரு மாதங்களுக்கு பிறகு ஐசிசி டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இந்த ஆண்டு எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டுமென்று அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது இந்திய.
அதனால் தெளிவான வீரர்களை வைத்து தான் இனிவரும் போட்டிகளில் விளையாட போவது உறுதி. அதுமட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர் என்னதான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடினாலும், வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள கஷ்டப்பட்டுக்கொண்டு வருகிறார்.
அதனால் நிச்சியமாக அவர் ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இடம்பெற வாய்ப்பு குறைவு தான். இதனை பற்றி பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில் ; “ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடினாலும் தொடர்ச்சியாக விளையாடுவது இல்லை என்பது தான் உண்மை.”


அதனால் சூர்யகுமார் யாதவ் அல்லது ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தீபக் ஹூடா இடம்பெறுவது ஒன்றும் தவறில்லை. ஏனென்றால் இப்பொழுது தீபக் ஹூடா சிறந்த போர்மில் தான் உள்ளார். அதனால் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் டேனிஷ் கனேரியா.”
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியுள்ளார் தீபக் ஹூடா. இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் இல்லாமல் தவித்து வரும் நிலையில் தீபக் ஹூடா மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.