HomeTrending Newsஇவரது விக்கெட்டை கைப்பற்றுவதற்கு பவுலர்களுக்கு சுலபமாக மாறிவிட்டது ; கம்பேக் கொடுக்க வேண்டும் ; இளம்...

இவரது விக்கெட்டை கைப்பற்றுவதற்கு பவுலர்களுக்கு சுலபமாக மாறிவிட்டது ; கம்பேக் கொடுக்க வேண்டும் ; இளம் வீரரை பற்றி பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் பேட்டி ;

இந்திய கிரிக்கெட் அணியில் பல இளம் வீரர்களுக்கு அவ்வப்போது வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. முன்பு போல் ரஞ்சி கோப்பை அல்லது உள்ளூர் விளையாட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களை மட்டுமே தேர்வு செய்து கொண்டு இருந்த நிலையில் இப்பொழுது ஐபிஎல் போட்டிகளை வைத்தும் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

ஆமாம், ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் ஏதாவது ஒரு சீசன் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியில் இடம்கிடைத்து விடும்,அதில் சந்தேகமில்லை. அதேபோல தான் 22வயதான பிருத்வி ஷாவ் அண்டர் 19 இந்திய அணியில் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளிலும் சிறப்பாக பேட்டிங் செய்த காரணத்தால் இந்திய அணியில் இடம்பெற்றார். கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி விளையாட தொடங்கினார் பிருத்வி ஷாவ். இதுவரை 6 ஒருநாள் போட்டிகளிலும், 4 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால் பல திறமையான வீரர்கள் அணியில் இடம்பெற்று இருக்கும் போது போட்டிகளில் வாய்ப்பு கொடுத்ததும் சரியாக விளையாடவில்லை என்றால் நிச்சியமாக தொடர்ந்து அணியில் இடம்பெறுவது சிரமமாக மாறிவிடும்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் பயிற்சியாளரான ஸ்ரீதர் கூறுகையில் ; பிருத்வி ஷாவ் ஒரு திறமையான வீரர் தான் என்று கூறியுள்ளார். மேலும் இதனை பற்றி பேசிய அவர் ; “ஆஃப் சைடில் சிறப்பாக பேட்டிங் செய்ய கூடிய வீரர் தான் பிருத்வி ஷாவ். ஆனால் இப்பொழுது அவரது பேட்டிங் பார்த்தால் பவுலர்களுக்கு முட்டாள்தனமாக மாறியுள்ளது தான் உண்மை.”

“எப்படி பவுலிங் செய்தலும் அவரால் சிறப்பாக விளையாடி ரன்களை அடிக்க முடியும். எந்த லெந்தில் பந்து வந்தாலும் அதனை gap பார்த்து விளையாடுவதில் சிறந்த வீரர். இப்பொழுதெல்லாம் அவர் பிட்னெஸ் பயிற்சியில் தோல்வியை சந்தித்து வருகிறார். எனக்கு அதுதான் ஒன்னு புரியவில்லை.”

“ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக தான் விளையாட தொடங்கினார், ஆனால் சீரியஸ் போட்டிகளில் பெரிய அளவில் விளையாடவில்லை. ஒருவேளை அவரது விளையாட்டில் நாம் அதிகமாக எதிர்பார்கிறோமா ? அவருக்கு (பிருத்வி ஷாவ்)-க்கு நேரம் கொடுக்க வேண்டும். அவர் ஒரு இளம் வீரர் , அதனால் இன்னும் போட்டிகளில் வாய்ப்பு கொடுக்கும்போது நிச்சியமாக சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் ஸ்ரீதர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img