கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதுவும் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை போட்டிகள் அங்கு நிலைமை மோசமாக உள்ளதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.


இந்த ஆசிய கோப்பை போட்டிக்கான டி-20 பேட்டிகளில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற அணிகள் இடம்பெற்றுள்ளனர். பின்னர் ஆறாவது இடத்திற்கு ஹாங் காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு மற்றும்குவைத் போன்ற நாடுகளில் ஏதாவது ஒரு அணி மட்டுமே இடம்பெற முடியும்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பையில் பங்கேற்க போகின்ற 15 பேர் கொண்ட அணியின் விவரத்தை வெளியிட்டது பிசிசிஐ. எதிர்பார்த்த படி வீரர்கள் அணியில் இடம்பெற்றாலும், ஒரு சிலர் அணியில் இல்லாதது கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் உள்ளது.
இந்திய அணியின் விவரம் :


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட்கோலி, சூரியகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷாப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சஹால், ரவி பிஷானி, புவனேஸ்வர் குமார், அர்ஷதீப் சிங், அவேஷ் கான் போன்ற வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் / பேட்ஸ்மேனான பார்திவ் பட்டேல் கூறுகையில் ; இந்திய கிரிக்கெட் அணியில் அக்சர் பட்டேல் விளையாடாதது அதிரிச்சியாக உள்ளது. ஏனென்றால், இந்திய அணிக்கு தேவையான நேரத்தில் ரன்களாக இருந்தாலும் சரி, பவுலிங்கில் விக்கெட்டை கைப்பற்றுவதில் சிறப்பாக செய்துள்ளார்.” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.


“கடந்த முறை அஸ்வினை அணியில் வைத்து விளையாடினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் OFF-spin தேவைப்படுகிறது. அதனால் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலை எடுத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”
மேலும் இந்திய அணியின் பவுலிங்கை பற்றி பேசிய பார்திவ் பட்டேல் : ” இந்த முறை ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர் மற்றும் வெறும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். எனக்கு தெரிந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வேகப்பந்து வீச்சுக்கு தான் அதிகமான வாய்ப்புகள் இருக்கும். அதனால் மூன்று சுழல் பந்து வீச்சாளர் மற்றும் நான்கு வேகப்பந்து வீச்சாளர் என்ற கணக்கில் இந்திய அணி தேர்வு செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”