வருகின்ற ஜூன் 18ஆம் தேதி முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். போட்டியில் பெற்று கோப்பையை கைப்பற்றுமா ? இந்திய என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
சமீபித்தில் பிசிசிஐ, இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 20 பேரின் பெயரை இந்திய அணியில் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி அதி; முக்கியமான இந்திய அணியின் ஆல் -ரவுண்டரான ஹார்டிக் பாண்டிய இடம்பெறவில்லை என்பது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை பற்றி பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரரான பார்திவ் பட்டேல் ; இந்திய அணியை பற்றி சில சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியும் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் இந்திய அணி மிகவும் பலமான அணியாக தான் இருக்கிறது. நியூஸிலாந்து அணியில் எப்படி அதிகமான வேகப்பந்து வீச்சாளர் இருக்கிறார்களோ ! அதேபோல தான் இந்திய அணியிலும் பும்ரா, இஷாந்த் சர்மா மற்றும் முகம்மது ஷாமி போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
11 போட்டிகளில் முகம்மது ஷாமி , இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா போன்ற வீரர்கள் 149 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். ஒருவேளை இவர்களுக்கு காயம் ஏற்பட்டதால் அதற்கு பதிலாக உமேஷ் யாதவ் மற்றும் முகம்மது சிராஜ் ஆகிய இருவர் அதனை சரி செய்வார்கள்.
பேட்ஸ்மேன் பட்டியலில் ; ரோஹித் சர்மா, சுமன் கில், விராட் கோலி, ரஹானே, புஜாரா, ரிஷாப் பண்ட் ஆகிய வீரர்கள் இருக்கின்றனர். அதனால் நிச்சியமாக நியூஸிலாந்து அணியை மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி வலுவாக தான் இருக்கிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்திய அணி சிறப்பான முறையில் ஆட்டத்தை விளையாடினார். அப்பொழுது ரவீந்திர ஜடேஜாவின் கையில் அடிபட்டுவிட்டது. அதனால் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இடம்பெற்றார்.
எப்படி ஜடேஜா பவுலிங் மற்றும் பேட்டிங் செய்வாரோ.. அதேபோல தான் அக்சர் பட்டேல் அதனை செய்துள்ளார். ஜடேஜா இடத்தை அவர் சரியாக பூர்த்தி செய்துள்ளர் அக்சர் பட்டேல். இதனால் ஜடேஜா அணியில் இல்லாதது போல தெரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறியுள்ளார்.