ஆபத்தான நிலையில் இருந்த இந்திய அணியை காப்பாற்றியது இவர் மட்டும் தான் ; டெஸ்ட் போட்டிக்கான சூப்பர் ஸ்டார் இவர் ; முன்னாள் வீரர் பேட்டி ;

0

பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.

முதல் இன்னிங்ஸ்:

இந்திய அணிக்கும் தொடக்க ஆட்டத்திற்கு ராசியே இல்லைய ? ஏனென்றால் சமீப காலமாகவே இந்திய அணியின் ஆபத்தாக இருக்கும் ஒரே விஷயம் தொடக்க ஆட்டம் மட்டுமே. ஏனென்றால், கே.எல்.ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால், கே.எல்.ராகுல் 22 மற்றும் சுப்மன் கில் 20 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். ஆனால் புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் அணியை ஆபத்தான நிலையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். ஆமாம் அவர்களது பார்ட்னெர்ஷிப் இந்திய அணிக்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது தான் உண்மை.

முதல் நாள் முடிவில் 90 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 278 ரன்களை அடித்த நிலையில் 6 விக்கெட்டை இழந்துள்ளனர். அதில் புஜாரா 90, ஸ்ரேயாஸ் 82*, ரிஷாப் பண்ட் 46, கே.எல்.ராகுல் 22, சுப்மன் கில் 20 ரன்களை அடித்துள்ளனர்.

முன்னாள் வீரர் புகழாரம் :

இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான விளையாட்டு இந்திய அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளதாக கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வாசிம் ஜாபர் கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய ஜாபர் கூறுகையில் : “சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளில் விளையாடி கொண்டு வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர். இருந்தாலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவது பாராட்ட கூடிய விஷயம் தான். உண்மையை சொல்ல வேன்றுமென்றால், இந்திய கிரிக்கெட் அணியை ஆபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளார். அதுமட்டுமின்றி, அவரது (ஸ்ரேயாஸ் ஐயர்) விளையாட்டு உண்மையிலும் சிறப்பான ஒன்று தான். அதில் சந்தேகம் வேண்டாம்.”

“அதிலும் குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களின் ஓவரில் சிறப்பாக விளையாடி வருகிறார் ஸ்ரேயாஸ் ஐயர் என்று புகழ்ந்து பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர்.”

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here