தோனி இல்லை; இந்திய அணியில் இவர் எல்லாரிடமும் ஏதோ குழந்தை பருவ நண்பர் போல தான் பழகுவார் ; முகம்மது ஷாமி

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே வருகின்ற ஜூன் 18ஆம் முதல் ஜூன் 22ஆம் தேதி வரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். இறுதி போட்டியில் யார் வெற்றியை கைப்பற்றி கோப்பையை வெல்ல போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதில் சில முக்கியமான வீரர்கள் இடம்பெறவில்லை. அதனால் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவரவர் கருத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணியில் ஹார்டிக் பாண்டிய மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் ஏன் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது..

அது எல்லாம் ஒருபக்கம் இருக்க, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் சமீபத்தில் அளித்த பேட்டியில் ; இவர் எப்பொழுது குழந்தை பருவ நண்பர் போலத்தான் பழகுவார். அதனை பார்க்கும்போது உண்மையாவே ஆர்ச்சரியமாக தான் இருக்கிறது என்று இந்திய வீரரை புகழ்ந்துள்ளார்.

அதில், விராட் கோலி மிகவும் சிறந்த கேப்டன், எப்பொழுது பவுலர்களுக்கு எந்த நேரத்திலும் அழுத்தத்தையும் கொடுத்தது இல்லை. அணியில் உள்ள அனைத்து வீரர்களிடமும், ஏதோ குழந்தை பருவத்தில் இருந்து நண்பராக இருப்பதை போல தான் அவர் எப்படியும் இருப்பார்.

அதுமட்டுமின்றி, ஒரு நாள் கூட நான் கேப்டன் என்ற தலைக்கனம் அவருக்கு (விராட் கோலி ) -க்கு இருந்ததே கிடையாது என்று கூறியுள்ளார் முகம்மது ஷாமி. உங்கள் அணியில் போட்டியின் போது ஏதாவது சண்டை அல்லது முகம்சுளிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்க ?

அதற்கு பதிலளித்த முகம்மது ஷாமி, ஆமாம் அது எல்ல போட்டியிலும், எல்ல அணிகளுக்கும் இடையே கண்டிப்பாக இருக்கும். ஆனால் அது ஒருபோதும், போட்டி முடிந்த பிறகு இருக்காது என்று கூறியுள்ளார் முகம்மது ஷாமி.