சிங்கம் களமிறங்கிருச்சு….! இந்திய அணிக்கு இனி தோல்வியே கிடையாது..! பவுலிங் செய்ய போகிறார் நம்ம ஆல் -ரவுண்டர் ; முழு விவரம் இதோ ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி உலககோப்பியா போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்றும் ஓமன் நாட்டிலும் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 151 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். பின்னர் பாகிஸ்தான் அணி 17.5 ஓவர் முடிவில் 152 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது பாகிஸ்தான்.

இந்திய தோல்விக்கு முக்கியமான காரணம் 6 பவுலர்கள் இல்லாதது தான் என்று பல முன்னாள் கிரிக்கெட் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியில் 4 பவுலர்கள் மற்றும் இரு ஆல் -ரவுண்டர்கள் உள்ளனர். அதில் ஹார்டிக் பாண்டியாவால் இப்பொழுதெல்லாம் பவுலிங் செய்ய முடிவதில்லை.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அவரை அணியில் இருந்து வெளியேற்றுங்கள் என்று அவரவர் கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங் செய்து 11 ரன்களை அடித்து ஆட்டம் இழந்தார்.

பின்னர், அவருக்கு தோள்பட்டையில் வலி ஏற்பட்டது. அதனால் ஹார்டிக் பாண்டியாவுக்கு பதிலாக இஷான் கிஷான் பீல்டிங் செய்தார். அதனால் அவர் அடுத்த போட்டியில் இடம்பெறுவாரா ?? இல்லையா ?? என்று பல கேள்விகள் எழுந்தன. அதற்கு பதிலளித்த இந்திய அணி,

ஹார்டிக் பாண்டியாவுக்கு ஒன்னும் பிரச்னை இல்லை. அவரால் நிச்சியமாக அடுத்த போட்டிகளில் விளையாடுவார். அதுமட்டுமின்றி, பவுலிங் பிட்னெஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றுள்ளார் ஹார்டிக் பாண்டிய. அதனால் ஹார்டிக் பாண்டிய வலைப்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.

அதனால் வருகின்ற 31ஆம் தேதி அன்று நியூஸிலாந்து அணியை எதிர்கொள்ள போகிறது இந்திய அணி. அதில் ஹார்டிக் பாண்டிய பவுலிங் செய்வார் என்று எதிர்பார்க்க படுகிறது…! ஹார்டிக் பாண்டியாவின் பவுலிங் இந்திய கிரிக்கெட் அணிக்கு உதவியாக இருக்குமா ?? என்பதை COMMENTS பண்ணுங்க…!!!!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here