முதலில் கொஞ்சம் திணறினார்..! ஆனால் அடுத்த ஆட்டத்தை மாஸ் பண்ணிட்டார் ; பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஓபன் டாக் ;

முதல் டெஸ்ட் போட்டி ட்ராவில் முடிந்தாலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மாஸ் ஆக வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. ஏனென்றால் 100 அல்ல 200 அல்ல, 372 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.

போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் அளித்த பேட்டியில் ; கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தான் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டி ட்ராவில் முடிந்தது தான் உண்மை.

ஆனால் அதற்கு மாற்றாக இரண்டாவது டெஸ்ட் போட்டி சிறப்பாக விளையாடியுள்ளது இந்திய கிரிக்கெட்டை அணி. என்னதான் முதலோ டெஸ்ட் போட்டியில் சில முன்னணி வீரர்கள் இல்லையென்றாலும், அதனை சரியாக புரிந்து கொண்டு இளம் வீரர்கள் விளையாடியுள்ளனர்.

முதலில் ஜெயந்த் யாதவ் பவுலிங் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டாலும், பின்னர் அதனை புரிந்து கொண்டு விளையாடியுள்ளார் ஜெயந்த் யாதவ். அதனை பாராட்டியே ஆக வேண்டும். அதுமட்டுமின்றி பலருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பே கிடைப்பதே கிடையாது.

அதுவும் ஷ்ரேயாஸ் ஐயர், மயங்க் அகர்வால்,அக்சர் பட்டேல் மற்றும் ஜெயந்த் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்.எங்களிடம் அதிக நேரம் இருந்தது. அதனால் இளம் வீரர்களுக்கு இந்த சூழ்நிலையில் பேட்டிங் செய்ய வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். எங்கள் வீரர்கள் அனைவரும் விதவிதமான போட்டிகளில் விளையாடி கொண்டே தான் வருகிறார்கள். அதனை பார்க்கும்போது சிறப்பாக இருக்கிறது என்று ராகுல் டிராவிட் கூறியுள்ளார்.

போட்டியின் சுருக்கும் :

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அதனால் முதல் இன்னிங்ஸ்-ல் 325 ரன்களை அடித்தது இந்திய. பின்னர் முதல் இன்னிங்ஸ் விளையாடிய நியூஸிலாந்து அணி வெறும் 62 ரன்களை அடித்த நிலையில் அனைவரும் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இந்திய அணி 276 ரன்களை குவித்தனர். பின்பு விக்கெட் மீதமுள்ள நிலையில் ஆட்டத்தை Declare செய்தார் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. பின்னர் 400க்கு மேற்பட்ட ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நியூஸிலாந்து அணி.

ஆனால் காத்திருந்தது தோல்விதான், ஏனென்றால் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் விளையாடிய 56.3 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 167 ரன்களை மட்டுமே கைப்பற்றியது. அதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது இந்திய அணி.