HomeTrending Newsஅவரால் என்ன முடியுமோ அதை செய்தார் ; அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான்; கேப்டனை...

அவரால் என்ன முடியுமோ அதை செய்தார் ; அவரிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுதான்; கேப்டனை பற்றி பேசிய விராட்கோலி ; யார் அந்த கேப்டன் ?

அவரால் என்ன முடியுமோ அதனை சிறப்பாக செய்துள்ளார். அவரிடம் இருந்து இதை நான் கற்றுக்கொண்டேன் என்று துணை கேப்டனை பற்றி பேசியுள்ளார் விராட்கோலி.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது இந்திய அணி. பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென்னாபிரிக்கா அணி. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மூன்றாவது போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றன.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட்கோலி-க்கு முதுகில் தசை பிடித்துக்கொண்டது அதனால் விராட்கோலியால் போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் விராட்கோலி க்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார்.

ஆனால் அந்த போட்டியில் இந்திய அணி மிகவும் மோசமான நிலையில் தோல்வியை சந்துத்துள்ளது. ஏனென்றால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்களால் சரியாக பேட்டிங் செய்யவில்லை, அதேபோல சரியாக பவுலிங் செய்து எதிரணியின் விக்கெட்டையும் கைப்பற்ற முடியவில்லை. அதனால் போட்டியின் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது தென்னாபிரிக்கா அணி.

அதனை பற்றி பேசிய விராட்கோலி, கே.எல்.ராகுலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். கே.எல்.ராகுல் பற்றி கூறுகையில்; எனக்கு தெரிந்து ராகுல் சிறப்பாக அணியை வழிநடத்தினார். அவரால் (கே.எல்.ராகுல்) முடிந்த வரை அவரது பிளான், பீலடிங் ஆகியவற்றை செய்துள்ளார். அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா அணியின் வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடி உள்ளார்கள் என்பது தான் உண்மை.

ஒவ்வொரு கேப்டனும் அவரவர் திறமைக்கு ஏற்ப அணியை வழிநடத்துவார்கள். நான் வழிநடத்தி இருந்தால் கண்டிப்பாக வேறு மாதிரியாக தான் இருந்திருக்கும். ஆனால் அனைத்து கேப்டன்களின் ஒரே நோக்கம் எதிர் அணியின் விக்கெட்டை கைப்பற்றுவது தான் என்று கூறியுள்ளார் விராட்கோலி. இன்றைய போட்டியில் மீண்டும் களமிறங்க போகிறார் விராட்கோலி.

அதனால் இந்திய அணிக்கு வலுவான பேட்டிங் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1 – 1 என்ற சம நிலையில் இரு அணிகளும் உள்ளது. அதனால் இந்த போட்டி நிச்சியமாக இந்திய கிரிக்கெட் அணிக்கு முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் இதுவரை தென்னாபிரிக்காவில் டெஸ்ட் போட்டிக்கான தொடரை கைப்பற்றியதே இல்லை.

அதுமட்டுமின்றி, விராட்கோலிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். ஏனென்றால் அவரது கேப்டன்ஷி பற்றி பேச்சு பெரிய அளவில் சர்ச்சை ஆனது. அதனால் ஒரு கேப்டனாக இந்த தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img