HomeTrending Newsஇப்பொழுது தான் இவரது திறமை என்னவென்று தெரிகிறது ; வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர் தான்...

இப்பொழுது தான் இவரது திறமை என்னவென்று தெரிகிறது ; வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர் தான் ; ரோஹித் சர்மா பேட்டி ;

இதுவரை நடந்த நான்கு டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 3 – 1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டுமின்றி டி-20 தொடரையும் வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.

நான்காவது போட்டியின் விவரம்:

நேற்று சென்ட்ரல் ப்ரோவ்ர்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய. அதிக ரன்களை அடிக்க வேண்டுமென்று அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி.

ஆனால் 5 ஓவரில் 2 விக்கெட்டை இழந்த இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா போன்ற வீரர்களின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தது. அதனால் இறுதி ஓவர் வரை விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 191 ரன்களை அடிக்க முடிந்தது.

அதில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 33, சூரியகுமார் யாதவ் 24, தீபக் ஹூடா 21, ரிஷாப் பந்த் 44, சஞ்சு சாம்சன் 30*, தினேஷ் கார்த்திக் 6, அக்சர் பட்டேல் 20 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

முதல் இரு ஓவர்கள் விக்கெட்டை இழக்காமல் சிறப்பிக்க விளையாடியது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் முதல் இரு விக்கெட்டை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வந்தனர். அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனான நிக்கோலஸ் பூரானின் அதிரடியான அதிரடியான ஆட்டம் இந்திய அணிக்கு பயத்தை ஏற்படுத்தியது தான் உண்மை.

ஏனென்றால், 8 பந்தில் மூன்று சிக்ஸர், 1 பவுண்டரி என்ற கணக்கில் அடித்து தொம்சம் செய்தார். எதிர்பாராத விதமான ரன் – அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இறுதி ஓவர் வரை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெறும் 132 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 59 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ; “இன்றைய போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு இருக்கும் சூழ்நிலை அப்படி ஒன்று சுலபமாக கிடையாது, அதிக ரன்களை அடிக்க. எப்படி ரன்களை அடிக்க போகிறோம் என்று பல யோசனை இருந்தது. ஆனால் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“பிட்ச் மெதுவாக இருந்தாலும் அதனை பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்திவிட்டனர் என்பது தான் உண்மை. நான் முதலில் 190 ரன்கள் நல்ல விஷயம் என்று தான் நினைத்தேன். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எந்த ரன்களும் சரியானது இல்லை. இன்றைய போட்டியில் இந்திய அணி நல்ல விளையாட்டை விளையாடினோம், அதனால் தான் வெற்றியை கைப்பற்றியுள்ளோம்.”

“வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்கல் சிறப்பாக விளையாடினாலும், விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் தான் அவர்கள் ரன்களை அடிக்க முடியமால் போனது. இப்பொழுது அவேஷ் கானுடைய திறமை என்னவென்று நன்கு தெரிகிறது. ஏனென்றால் அனைவருக்கும் ஒன்று அல்லது இரு மோசமான போட்டிகள் இருக்கும்.”

“ஆனால் தொடர்ந்து வாய்ப்பை கொடுக்கும்போது தான் அவர் எப்படி விளையாடுகிறார் என்பது தெரிய வரும். அனைவருக்கும் அவர்களுக்கு ஏற்ப இடத்தை கொடுக்க வேண்டும். எனக்கு தெரிந்து அவர் (அவேஷ் கான்) அவரது இடத்தையும் சூழ்நிலையும் சரியாக பய்னபடுத்தி உள்ளார்,அதனை பார்க்க சந்தோசமாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img