இந்திய கிரிக்கெட் அணி :
இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் முன்பில் இருந்து இந்திய அணிக்கு பல பிரச்சனை ஏற்பட்டது. எப்படியாவது உலகக்கோப்பை போட்டியில் வெல்ல வேண்டுமென்று நினைத்து கொண்டு இருந்த இந்திய அணிக்கு காத்திருந்தது அதிர்ச்சி..! ஏனென்றால், முன்னணி பவுலர் பும்ரா மற்றும் ஆல் – ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் காயம் காரணமாக ஐசிசி டி-20 போட்டிகளில் விளையாட முடியாத நிலை உருவானது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நிலைமை :
எப்பொழுதும் இந்திய கிரிக்கெட் அணி தொடக்கத்தில் சிறப்பாக தான் விளையாடும் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல, பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வென்றுள்ளது. ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இந்திய.
இதே நிலை தொடர்ந்தால் நிச்சியமாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான இல்லாமல் போயிடும். அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணி வெல்ல தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் பினிஷராக விளையாடும் தினேஷ் கார்த்திக்கு காயம் ஏற்பட்டுள்ளதா ? இல்லையா ?

இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில் தினேஷ் கார்த்திக்-க்கு காயம் ஏற்பட்டது. அதனால் அவரால் அடுத்த போட்டியில் பங்கேற்க முடியுமா ? இல்லையா ? என்று பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில் ” தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பவுன்சர் பந்தை பிடிக்க முயன்ற போது அவரது முதுகில் வலி ஏற்பட்டது. நேற்று நடந்த டிரீட்மென்ட் தினேஷ் கார்த்திக்-க்கு போதுமான நிலையில் இருக்கிறது. இப்பொழுது அவர் குணமடைந்துள்ளார். அதுமட்டுமின்றி, நேற்று நடந்த பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக் பங்களித்துள்ளார்.”
“அதனால் அவரது உடல்நிலையை நாங்கள் நன்கு கவனித்து கொண்டு வருகிறோம். நேற்று நடந்த பயிற்சியில் பங்களிப்பை காட்டிய தினேஷ் கார்த்திக் இன்று காலை எழுந்த பிறகு எப்படி இருக்கிறார் என்பதை பார்த்த பிறகு தான் இறுதி முடிவுகள் எடுக்க முடியும் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு தினேஷ் கார்த்திக்கின் பங்களிப்பு இல்லை என்பது தான் உண்மை. ஒருவேளை இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை என்றால் அவருக்கு பதிலாக யார் அணியில் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதை மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்..!
0 Comments