இந்த பையன் வெறித்தமாக பவுலிங் செய்கிறார் ; நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவார் ; ரவி சாஸ்திரி உறுதி ;

0
ravi sastri

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

Ravi sastri

இதுவரை நடந்து முடிந்த ஒருநாள் போட்டிக்கான தொடரில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இப்பொழுது டி-20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த நான்கு டி-20 போட்டிகளில் 3 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து ஆசிய மற்றும் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இருப்பினும் 15 பேர் கொண்ட உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆமாம், அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி கூறுகையில் ; “ஆஸ்திரேலியாவின் எப்பொழுதும் இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு அதிகமான அளவில் உதவியாக இருக்கும்.”

“இந்திய கிரிக்கெட் அணிக்கு அந்த பிரச்சனை இருந்தது. ஆனால் இப்பொழுது அதற்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. அர்ஷதீப் சிங் பவுலிங் உண்மையிலும் பவுசர், மற்றும் சிறப்பான பந்து வீச்சு உள்ளது. இந்திய அணியில் புவனேஸ்வர், பும்ரா, ஷமி போன்ற முன்னணி வீர்ரகளுடன் இவரும் இடம்பெற்றால் அது சிறப்பாக இருக்கும்.”

“ஒருவேளை இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளருக்கு வாய்ப்பு கொடுத்தால், நிச்சியமாக நான் மூன்று வலது கை வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் (அர்ஷதீப் சிங்) ஒருவர் என்று தான் தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.”

நான்காவது போட்டியில் விளையாடிய அர்சத்தீப் சிங் 3.1 ஓவர் பவுலிங் செய்து 12 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இதேபோல அடுத்த போட்டியிலும் விளையாடினால் ஆசிய கோப்பையிலும் இடம்பெற அதிக வாய்ப்பு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here