வெற்றிக்கு முக்கியமான காரணம் இவர் தான் ; இதை பற்றி நான் ராகுல் டிராவிடம் பேசியே ஆக வேண்டும் ; ரோஹித் சர்மா

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் நேற்று இரவு முதல் தொடங்கியது. நேற்று நடந்த முதல் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரோஹித் சர்மா முதல் மூன்று ஓவர்கள் அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆனால் எதிர்பாராத வகையில் விக்கெட்டை இழந்தார்.

இந்த முறை மிடில் ஆர்டர் சொதப்பல் ஆட்டத்தை மட்டுமே விளையாடினார்கள். ஆமாம், விராட்கோலி, ஹர்டிக் பாண்டிய மற்றும் சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்தார். இருப்பினும் இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்து ரன்களை விளாசினார்.

அதனால் 20வது ஓவர் முடிவில் 170 ரன்களை அடித்தது இந்திய அணி. அதில் ரோஹித் 31, பண்ட் 26, ரவீந்திர ஜடேஜா 46 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 171 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. முதல் இரு ஓவரில் முக்கியமான பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மற்றும் ஜேசன் ராய் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து அணி.

அதனால் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து அணியால் மீண்டு வர முடியாமல் போனது. இருப்பினும் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லே போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினாலும், ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்தனர். அதனால் இங்கிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட ரன்களை அடிக்க முடியாமல் போனது.

அதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது மட்டுமின்றி 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இன்னும் மீதமுள்ள மூன்று போட்டிகளில் ஒன்று ஜெயித்தால் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

போட்டி முடிந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய ரோஹித் ; “இங்கிலாந்து அணி எப்படி பட்ட அணி என்று எங்களுக்கு நன்கு தெரியும்.இங்கிலாந்து-ல் மட்டுமில்லாமல், வேறு எந்த இடத்திற்கு சென்றாலும் அவர்களாவது விளையாட்டு எப்பொழுதும் சிறப்பாக தான் இருக்கும்.”

“ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் நிச்சியமாக சந்தோஷம் இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, அதனை தான் இந்திய வீரர்கள் உணர்கிறோம். வெற்றி பெற்ற பிறகு எப்படி விளையாடுகிறோம் என்பதை நாங்க பார்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, ஏதாவது ஒருவர், சிறப்பாக விளையாடி ரன்களை அடிக்க வேண்டும்.”

“இதே இடத்தில் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார், அதில் இருந்து அப்படியே விளையாடி வருகிறார். பொறுமையாக விளையாடி ரன்களை அடித்து வந்தார். எங்களுக்கு பவர் ப்ளே எவ்வளவு முக்கியம் என்பது புரிந்தது, பேட்டிங் செய்யும்போது ரன்களை அடிப்பதிலும், பவுலிங் செய்யும்போது விக்கெட்டை கைப்பற்றுவதில் அதே தான்.”

“எங்கள் ப்ளேயிங் 11ல் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும், இதனை பற்றி நான் பயிற்சியாளரிடம் பேச போகிறேன் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here