இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை மதியம் நடைபெற உள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021யில் இந்திய அணி இறுதி போட்டி வரை முன்னேறியது. ஆனால் இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை பெற்றது.அதில் இருந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் கவனம் செலுத்தி வருகிறது…!
அதிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் அதிரடி மன்னன் என்று அழைக்கப்படும் விராட்கோலி, கடந்த சில போட்டிகளில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் ஆட்டம் இழந்து வருகிறார். முன்பு கேப்டன் பதவியாவது இருந்தது. ஆனால் இப்பொழுது அதுவும் இல்லை.
அதனால் இனிவரும் போட்டிகளில் சரியாக விளையாடினால் மட்டுமே தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் ப்ளேயிங் 11ல் இடம்பெற முடியும். இது விராட்கோலி-க்கு மட்டுமின்றி அனைத்து இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த சூழ்நிலை தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை…!
விராட்கோலி பற்றி பல கருத்துக்கள் பரவி வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் சில முக்கியமான தகவலை பதிவு செய்துள்ளார். அதில் : “33வயதான விராட்கோலி இப்பொழுது தவறான நிலைமையில் இருப்பது போல தான் அனைவரும் நினைக்கின்றனர்.”
“ஆனால் அப்படி இல்லை எனக்கு தெரிந்து விராட்கோலி இப்பொழுது சரியான இடத்தில் தான் உள்ளார். விராட்கோலி எப்பொழுதும் பிட்னெஸ் ஆக தான் இருக்கிறார். அவரை போன்ற கடினமாக உழைக்கும் வீரரை நான் பார்த்ததே இல்லை. அவர் இப்பொழுது இந்திய அணியில் இருப்பது சரிதான்.”
“அவருடைய பசி என்ன என்பது அவருக்கு (விராட்கோலி) நன்கு தெரியும். அவர் பயிற்சி செய்யும் முறை, விளையாடும் விதம் தான் முக்கியம். பயிற்சி ஆட்டத்தில் 50,60 ரன்களை அடித்ததில் இருந்து நன்கு தெரிகிறது. விராட்கோலி சரியான பாதையில் தான் செல்கிறார்.”
“விராட்கோலி இப்பொழுது இருக்கும் நிலைமை நிச்சியமாக அனைவரும் கடந்து வர வேண்டிய ஒரு சூழல் தான்.அதனால் அவரை ஊக்கப்படுத்த வேண்டும் என்று அர்த்தம் இல்லை.கேப் டவுன் மைதானத்தில் 70 ரன்களை அடிப்பது மிகவும் கடினமான விஷயம். என்னதான் மூன்று இலக்கு ரன்களை அடிக்கவிட்டாலும், அந்த மைதானத்தில் 79 ரன்களை அடித்தது சிறப்பான விஷயம் தான் என்று கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.”
விராட்கோலி இந்த ஆண்டு தொடக்கத்தில் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் 79 ரன்களை கேப் டவுன் மைதானத்தில் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.