ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக இவர் ஒருத்தர் போதும் ; பா செம பேட்டிங் ; ஜடேஜாவை எல்லாரும் மறந்துட்டாங்க ; முன்னாள் வீரர் உறுதி ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்ற வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு போட்டிகளில் 1 – 1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

அதனால் நாளை நடைபெற உள்ள போட்டியில் வெல்லும் அணி தான் தொடரை கைப்பற்றும். நாளை இரவு 7 மணியளவில் ராஜ்கோட்-ல் உள்ள சவுராஷ்டிரா மைதானத்தில் நடைபெற உள்ளது. வாழ்வா சாவா போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

இரண்டாவது டி-20 போட்டிக்கான விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 206 ரன்களை அடித்தனர். பின்பு 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு மோசமான பேட்டிங் அமைந்த காரணத்தால் தோல்வி தான் மிஞ்சியது.

தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்டிங் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இந்திய. இறுதி ஓவர் வரை போராடிய இந்திய அணியால் 190 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது இந்திய.

நீண்ட நாட்களாக அணியில் விளையாட முன்னணி ஆல் – ரவுண்டர் :

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழும் ஆல் – ரவுண்டர் தான் ரவீந்திர ஜடேஜா. கடந்த சில மாதங்களாவே காயம் காரணமாக எந்த விதமான பேட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருக்கிறார். அதனால் இவருக்கு பதிலாக அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கூட அதிரடியாக பேட்டிங் செய்த அக்சர் பட்டேல் 31 பந்தில் 65 ரன்களை அடித்து தொம்சம் செய்தார். அதுமட்டுமின்றி, நான்கு ஓவர் பவுலிங் செய்த அக்சர் பட்டேல் 2 விக்கெட்டை கைப்பற்றிய நிலையில் 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் : “எனக்கு தெரிந்து இந்திய கிரிக்கெட் அணி மூன்று விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் ரவீந்திர ஜடேஜாவை மிஸ் செய்யவில்லை. ஏனென்றால், அதற்கு பதிலாக தான் அக்சர் பட்டேலை கண்டுபிடித்துள்ளனர். அக்சர் பட்டேல் சமீப காலமாகவே சிறப்பாக விளையாடுவதால் ரவீந்திர ஜடேஜாவின் பேச்சுக்கு இடமில்லாமல் போய்விட்டது.”

“இப்பொழுது இருக்கும் இந்திய அணியின் நம்பர் 1 ஸ்பின் ஆல் – ரவுண்டர் தான் அக்சர் பட்டேல். ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக இது போன்ற சிறந்த மாற்று வீரர் கிடைத்தது மகிழ்ச்சியான விஷயம். ரவீந்திர ஜடேஜா [பவர் ப்ளேவில் பவுலிங் செய்யமாட்டார். ஆனால் அக்சர் பட்டேல் அதையும் செய்து வருகிறார். நேற்று விளையாடியது போலவே தொடர்ந்து பேட்டிங் செய்தால் பிறகு ரவீந்திர ஜடேஜா ஆ? அக்சர் பட்டேல் ஆ? என்று விவாதம் நிச்சியமாக ஏற்படும்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here