Advertisement
HomeTrending Newsவிராட்கோலி எப்பையுமே இப்படி தான் செய்வார் ; எப்படி தான் இப்படி இருக்கிறாரோ ; ரோஹித்...

விராட்கோலி எப்பையுமே இப்படி தான் செய்வார் ; எப்படி தான் இப்படி இருக்கிறாரோ ; ரோஹித் சர்மா பேட்டி ; முழு விவரம் இதோ ;

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த முறை இந்தியாவில் நடைபெற வேண்டிய உலகக்கோப்பை போட்டிகள் சில தவிர்க்க முடியாத காரணத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்தது பிசிசிஐ. அதனை ஒப்புக்கொண்ட ஐசிசி சிறப்பாக போட்டிகளை நடந்தி வருகின்றனர்…!!

ஆனால் இந்த முறை விராட்கோலி கேப்டனாக இருக்க போகும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால், அதற்கு எதிர்மாறாக தான் நடந்துள்ளது. ஏனென்றால் இந்த முறை அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா இல்லையா என்பதே தெரியவில்லை….!

ஏனென்றால் இதுவரை இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியளில் 5வது இடத்தில் உள்ளது இந்திய அணி. அதுமட்டுமின்றி முதல் இரண்டு இடத்தை கைப்பற்றிய அணிகள் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெரும். முதல் இரண்டு இடங்களை பிடிக்க நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டிபோட்டு கொண்டு விளையாடி வருகின்றனர்.

அரை இறுதி ஒரு பக்கம் இருக்க இந்திய அணி இரு போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது. அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி, இந்திய வீரர்களை பற்றி தவறான கருத்துக்களை சமுகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் அவ்வப்போது ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம்.

அதேபோல தான் இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித் சர்மா சமீபத்தில் அளித்த பேட்டியில், விராட்கோலி யை பற்றி சில கருத்துக்கள் கூறியுள்ளார். விராட்கோலி பற்றி பேசிய அவர் ” ஒரு போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற வெறி விராட்கோலியிடம் இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது “.

அதுமட்டுமின்றி, வெற்றியை கைப்பற்றுவது அவ்வளவு சுலபம் கிடையாது. கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இப்பொழுது வரை அவர் ஒவ்வொரு போட்டியிலும் அவரது திறமை வளர்ந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது வளர்ச்சி வளர்ந்து கொண்டே செல்கிறது தான் உண்மை. அவர் முன்னேறிக்கொண்டே செல்கிறார் என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா….!!

ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா இதுவரை இரு போட்டிகளில் விளையாடி வெறும் 14 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுவும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 0 மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய அணியிம் டி20 போட்டிக்கான கேப்டன் ரோஹித் சர்மா தான் இருக்க போகிறார்.. ! எப்படி அணியை வழிநடத்த போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்….!! ரோஹித் சர்மா டி20 கேப்டனாக இருப்பது இந்திய அணிக்கு சிறப்பாக இருக்குமா ?? இல்லையா?? உங்கள் கருத்தை மறக்காமல் COMMENTS பண்ணுங்க….!!!

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular