ஆஸ்திரேலியா: உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐசிசி டி-20 லீக் போட்டிகள் வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

ஆனால் இந்திய அணிக்கு முதல் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி அன்று பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளனர். அதற்கு முன்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டமும் நடைபெற உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியிக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை :
கடந்த மாதம் ஐசிசி டி-20 போட்டிக்கான இந்தியா அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அதில் முன்னணி பவுலரான ஜஸ்பிரிட் பும்ராவிற்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ உறுதியான தகவலை வெளியிட்டுள்ளனர்.
அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பும்ராவிற்கு பதிலாக யார் களமிறங்கினால் சிறப்பாக இருக்கும் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேபோல தான் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் “உம்ரன் மலிக் 150 கீமி வேகத்தில் பவுலிங் செய்து வருகிறார். ஒரு அருமையாக கார் உங்களிடம் உள்ளது. ஆனால் அது கேரேஜ்-ல் இருந்தால் என்ன பலன் ? அதேபோல தான் உம்ரன் மலிக் இந்திய அணியில் இருந்தும் உலகக்கோப்பை போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லையா ?”
“அவர் இளம் வீரர் தான், அதுவும் 150 கீமி வேகத்தில் தான் பவுலிங் செய்து வருகிறார். அதனால் ஆஸ்திரேலியாவில் விளையாட இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவரது வேகத்தில் மற்ற வீரர்கள் யாரும் பவுலிங் செய்ய முடிவு. ஒருவேளை யாராவது 140 கீமி வேகத்திற்கும் உம்ரன் மலிக் வீசும் 150 கீமி-க்கும் பல வித்தியாசங்கள் உள்ளது.”
“உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜஸ்பிரிட் பும்ரா அணியில் இல்லாதது நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க போகும் இந்திய அணிக்கு பின்னடைவு தான். ஆனால் , அதற்காக நான் அவர்களால் (இந்திய) விளையாடவே முடியாது என்று சொல்லமாட்டேன். வலுவாக அணியாக தான் இந்திய கிரிக்கெட் அணி திகழ்கிறது.”

“ஆனால் பும்ரா இல்லாதது நிச்சியமாக புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ கூறியுள்ளார்.”
ஜஸ்பிரிட் பும்ராவிற்கு பதிலாக இந்திய அணியின் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலில் யார் இடம்பெற்றால் இந்திய அணிக்கு வலுவாக இருக்கும் ? சரியான மாற்று வீரர் யாராக இருக்க முடியும் ?
0 Comments