எனது 21 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இவர் தான் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.. ! யாராக இருக்கும் ??
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், அவரது 21ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் என்று கூறியுள்ளார். இதனை பார்ட்டி பேசி அவர், என்னை பொறுத்த வரை அந்த இடத்தில இரு வீரர்கள் உள்ளனர்.
அதில் இலங்கை அணியை சேர்ந்த சங்கக்காரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அதில் முதில் இடத்தில் உள்ளது நம் மும்பையை சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் அவரது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15921 ரன்களை அடித்துள்ளார் அதில் 51 சதங்கள் அடங்கும். சச்சின் டெண்டுல்கரை பின்தொடர்ந்து ரிக்கி பாண்டிங் இடம்பெற்றுள்ளார். ஆனால் சச்சின் டெண்டுல்கரை விட 2543 ரன்கள் பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல, குமார சங்கக்காரா அவரது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 12400 ரங்களையும், அதில் 38 சதங்களையும் அடித்துள்ளார். இதில் முக்கியமான விஷயம் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் அவரது 16 வயதிலேயே முதல் டெஸ்ட் போட்டியை தொடங்கிவிட்டார்.
இப்பொழுது விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் கென் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்று வருகிறது. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்அம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.