HomeTrending Newsஇவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு சரியாக இருக்கமாட்டார் ; அனுபவம் இல்லை ; முன்னாள்...

இவர் இந்திய அணியில் விளையாடுவதற்கு சரியாக இருக்கமாட்டார் ; அனுபவம் இல்லை ; முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உறுதி ;

இந்திய கிரிக்கெட் அணி:

இந்திய கிரிக்கெட் அணியில் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகிறது பிசிசிஐ. அதுவும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் விளையாடும் விதத்தை வைத்து சர்வதேச போட்டிகளில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு விளையாட வாய்ப்புகள் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கிறதா ? என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இன்னும் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வருகின்றனர். அதனால் ஒரு சில முக்கியம் இல்ல போட்டிகளில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தான் வருகிறது.

ஐபிஎல் 2021:

ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் இந்தியாவில் ஆண்டுதோறும் சிறப்பிக்க நடைபெற்று வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியில் நடராஜனுக்கு பதிலாக அணியில் இடப்பெற்றார் உம்ரன் மாலிக். அவரது பவுலிங் அதிவேகமாக இருந்த காரணத்தால் சிறப்பாக விளையாடி வந்தார்.

இப்பொழுது இருக்கும் இந்திய வீரர்களில் இவர் மட்டுமே வேகமாக பவுலோய்ங் செய்து வருகிறார். அதனால் இந்திய அணியில் இவருக்கு அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது. ஆனால் ரன்களை அதிகமாக கொடுத்துள்ளார் உம்ரன்.

ஆமாம் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டிகளில் விளையாடிய உம்ரன் மாலிக் நான்கு ஓவர் பவுலிங் செய்து 56 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார் உம்ரம் மாலிக். அதாவது ஒரு ஓவருக்கு 14 ரன்கள் என்ற அடிப்படையில் கொடுத்துள்ளார்.

இதில் இந்திய அணிக்கு ஏதாவது நல்லதா ? என்று கேட்டால் நிச்சியமாக இருக்காது. ஏனென்றால் பவுலர் என்றால் குறைவாக ரன்களை கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதிக விக்கெட்டை கைப்பற்ற வேண்டும். உம்ரன் மாலிக் இதில் இரண்டுமே இல்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் ; ” நிச்சியமாக மற்ற பவுலர்களை போல உம்ரன் மாலிக் கிடையாது. அவரது வேகம் நிச்சியமாக அடுத்த வீரருக்கு சொல்லிக்கொடுக்க முடியாது. ஆனால் என்னை பொறுத்தவரை உம்ரன் மாலிக் இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாட இன்னும் தயாராகவில்லை.”

“இன்னும் அவருக்கு நேரம் வேண்டும். அவர் (உம்ரன் மாலிக் குறைவான போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்துள்ளார் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img