வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் இல்லை ; அதுவும் நல்லது தான் ; ஆசிஷ் நெஹ்ரா உறுதி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான சீரியஸ் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த டி-20 தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தனர். அதனால் டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்றியது இந்திய.

இதனை தொடர்ந்து வருகின்ற ஜூலை 22ஆம் தேதி முதல் நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். அதற்கான இந்திய அணியின் விவரத்தை பிசிசிஐ முன்பே வெளியிட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியின் விவரம் :

ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுமன் கில், தீபக் ஹூடா, சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஷர்டுல் தாகூர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் பட்டேல், பிரஷித் கிருஷ்ணா, முகமத் சிராஜ் மற்றும் அர்ஷதீப் சிங்.

இதில் ரோஹித் சர்மா, விராட்கோலி பும்ரா, ஹர்டிக் பாண்டிய, ஷமி போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறுகையில் ; ” என்ன வேணாலும் பிளான் செய்யலாம், ஆனால் எல்லாமே சரியாக நடக்குமா என்று சொல்ல முடியாது.”

“டி-20 அல்லது ஒருநாள் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேனாக ஹர்டிக் பாண்டியாவால் சிறப்பாக விளையாட முடியும். அதுவும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக, ஒருவேளை ஹர்டிக் பாண்டிய பவுலிங் செய்தால் அது அணிக்கு நல்ல விஷயம். அதற்காக ஹர்டிக் நிச்சியமாக இந்தியா அணியின் ஐந்தாவது பவுலராக இருக்க முடியாது.”

“வேண்டுமானால் ஆறாவது பவுலராக இருக்க வாய்ப்பு உள்ளது. ஒரு பேட்ஸ்மேனாக ஹர்டிக் பாண்டிய குஜராத் அணியில் 4வதாகவும்,இந்திய அணியில் 5வது இடத்தில் விளையாடி வருகிறார். குறைவான ஓவரில் அதிக ரன்களை அடித்து அணிக்கு சிறப்பாக விஷயத்தை செய்து வருகிறார்.”

அவரது பிட்னெஸ் பற்றி சோலா ஏதுமில்லை. ஏனென்றால் அவர் மிகவும் கடினப்பட்டு தான் முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஹர்டிக் பாண்டிய இல்லாதது, நல்ல விஷயம் தான். ஏனென்றால் அணியில் இடம்பெற்றால் நிச்சியமாக பிட் ஆக இருந்து பவுலிங் செய்ய வேண்டும்.”

“கடந்த 3 மாதங்களாக சிறப்பாக விளையாடி வருகிறார் ஹர்டிக் பாண்டிய. ஹர்டிக் பாண்டிய ஐந்தாவது பவுலராக டி-20 அல்லது ஒருநா போட்டிகளில் விளையாடுவது அவ்வளவு சுலபம் இல்லை என்று கூறியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா.” ஹர்டிக் பாண்டிய இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் 7 ஓவர் பவுலிங் செய்து 5 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here